ஆக்கிரமிப்பு சீனாவுக்கு பதிலடி; 4 கி.மீ., உள்ளே புகுந்தது இந்திய ராணுவம்!

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
லடாக்: கடந்த 1962ல் நடந்த போரின் போது, கிழக்கு லடாக்கில் எதார்த்த கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, ரெக்கின் கணவாய் பகுதியை சீனாவிடம் இந்தியா இழந்தது. அதன் பின் அப்பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்நிலையில் தற்போது இந்தியப் படைகள் ரெக்கின் கணவாய்ப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Mission PoK/Aksai Chin starts with the later one. Approx 3.5 Kms (Reqin) taken back today in Ladakh. First step towards Akhand

லடாக்: கடந்த 1962ல் நடந்த போரின் போது, கிழக்கு லடாக்கில் எதார்த்த கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, ரெக்கின் கணவாய் பகுதியை சீனாவிடம் இந்தியா இழந்தது. அதன் பின் அப்பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்நிலையில் தற்போது இந்தியப் படைகள் ரெக்கின் கணவாய்ப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.latest tamil news


சீனர்கள் ஆக்கிரமித்துள்ள ரெக்கின் கணவாய் பகுதியில், சீனர்கள் முகாம் அமைத்துள்ளனர். ரெக்கின் பகுதிக்கு அருகே, ஸ்பாங்கூரிலும் சீனர்களுக்கு இரு முகாம்கள் உள்ளன. மேலும் சீனர்கள் ரெக்கினுக்கு அருகில் ஒரு மின்னணு கண்காணிப்பு கோபுரத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் கட்டியிருந்தனர்.

இந்நிலையில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த ரெக்கின் கணவாய்ப் பகுதியில், 4 கி.மீ., தூரத்துக்கு இந்தியப் படைகள் முன்னேறி உள்ளதாகவும் அப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


latest tamil news


இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆக., 31ம் தேதி, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கிழக்கு லடாக்கில் எதார்த்த கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, பாங்கோங் ஏரியின் தெற்கு கரையிலும், ரெக்கின் கணவாய் பகுதியிலும் இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது,'' எனத் தெரிவித்திருந்தார்.


latest tamil news'இந்த ரெக்கின் கணவாய் பகுதிகள் இந்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அதன் பக்கவாட்டில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும், மலைப்பாதையில் பயணிப்பதன் மூலமும், இந்திய ராணுவ வீரர்கள் ஸ்பாங்கூரில் உள்ள சீன முகாம்களையும் அழித்தொழிக்க முடியும்' என, ராணுவ வீரர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
08-செப்-202011:55:34 IST Report Abuse
Indian  Ravichandran சீமான் இந்த செய்தியை கேட்டு ஒருவேளை தற்கொலைக்கு முயற்ச்சிக்கலாம், இந்திய ராணுவத்தை எத்தனை முடுயுமோ அவ்வளவு கேவலமாக பேசின வாய் அது. பாகிஸ்தான் கிட்ட மட்டும்தான் இந்திய வீரத்தை கட்டுமாம் சீனாவை பார்த்த பயப்படுவோமாம். சீமான் செய்தி படிச்சுட்டு உங்க எசமான் கிட்ட அடுத்து என்ன பேசட்டுமுன்னு ஆலோசனை கேளுங்க.
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
07-செப்-202009:42:52 IST Report Abuse
Hari தேசப்பற்று இல்லாத கயவர்களின் செய்தியையும் செயலிகளைம் தடை செய்யணும்.
Rate this:
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
04-செப்-202008:32:22 IST Report Abuse
Hari Krishnan இந்தியா பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய பொது அப்பிடியொன்றும் நடக்கவில்லை இது மோடியின் அரசியல் ஸ்டாண்டு என்றார்கள் நம்ம எதிர்கட்சிகள் .. பின் கருத்து மாறிப்போய் பாகிஸ்தானின் காட்டுக்குள் தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது என்றார்கள்.. அங்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்கள்..ஆனாலும் இவர்களது மொழியில் பாதிப்பில்லாத சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கே ரொம்ப நாள் பிதற்ற வைத்தது.. பின் சீனாவுடனான சமீபத்திய எல்லை கட்டுப்பட்டு கோட்டில் நிகழ்த்த சண்டையில் " புதிய பிரச்சாரம் ஆரம்பித்தார்கள் மோடியின் 56 இஞ்சு எல்லாம் பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தமட்டும் தான் ..சீனாவை பார்த்து 56 இஞ்சு சுருங்கிப்போச்சு என்று " இப்போது வந்துள்ள செய்தி திராவிட காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை மேலும் கலக்கமடைய செய்யும்.போல.. 56 இஞ்சு மேலும் விரிவடைவது இவர்களால் பொறுத்துக்கொள்ள இயலுமா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X