ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பல கார்ப்பரேட் நிறுவனங்கள், 2021 வரை, வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன. இதனால், வீட்டில், மடிக் கணினியுடன், மணிக்கணக்கில் வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதே வேளையில், வீட்டு வேலையில் உள்ள பணியாளர்கள், அவ்வப்போது, மேலதிகாரி மற்றும் சகாக்களுடன், இணைய வழியே, ஜூம் போன்ற செயலிகள் மூலம் ஆலோசனை கூட்டங்களை நடத்தவேண்டியுள்ளது.
இந்த கூட்டங்களின்போது, கசங்கிய பெண்கள் பூப் போட்ட லெக்கிங்சும், ஆண்கள், ராமராஜன் கலர் பெர்முடாசும் அணிந்திருந்தாலும், இடுப்புக்கு மேலே பக்காவான உடைகளை அணிந்தே ஜூம் கூட்டங்களில் பங்கேற்க வேண்டியுள்ளது.இதற்கென, இப்போது பல, 'ஸ்டைலிஸ்டுகள்' முளைத்துள்ளனர். இவர்கள், ஆண் பெண் என இரு தரப்பினருக்கும் இடுப்புக்கு மேல் விதவிதமான உடைகள், மேக் அப் சாதனங்களை ஜூம் கூட்டங்களுக்காகவே உருவாக்கி விற்பனை செய்கின்றனர். இதுதான், வீட்டிலிருந்தே வேலை செய்வோர் சந்தையில் டிரெண்டிங் டாபிக்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE