இதுவரை மிக எளிய வடிகட்டிகளைக் கொண்ட முக கவசங்களே சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், பன்னாட்டு நுகர்பொருள் நிறுவனமான, எல்.ஜி., தற்போது ஒரு ராஜ முக கவசத்தை வடிவமைத்துள்ளது.'பியூரி கேர்' என்ற இந்த கவசம் பேட்டரியால் இயங்கும். இதில் உள்ள புறஊதா கதிர் விளக்குகள் காற்றில் உள்ள கொரோனா உள்ளிட்ட கிருமிகளை கொல்லும். பிறகு மாசினை தடுக்கும் வடிகட்டிகளை கடந்து துாய காற்று மட்டும் சுவாசிக்கத் தருகிறது இந்த முக கவசம்.
ஏற்கனவே, அறைக்குள் உள்ள காற்றினை சுத்திகரிப்பதற்காக, எல்.ஜி வடிவமைத்து விற்பனை செய்து வரும் ஏர் பியூரிபையர் சாதனங்களில் உள்ள பாகங்களை எடுத்து, புதிய மூச்சுக் கவசத்தை உருவாக்கியுள்ளது. வடிகட்டிகள் முதல் இந்த கவசத்தில் உள்ள எல்லா பாகங்களும் தனித் தனியே கடையில் வாங்க முடியும் என, எல்.ஜியின் இணைய தளம் உறுதி அளிக்கிறது. அதே, போல இதில் உள்ள அனைத்து பாகங்களும் மறு சுழற்சி செய்யத்தக்கவை எனவும் எல்.ஜி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE