பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளில் ராணுவ தளங்களை நிறுவ சீனா முயற்சி

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன்: பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளில் ராணுவ தளங்களை நிறுவ சீனா முயற்சித்து வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில், சீனா தொடர்பான ராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து 200 பக்கம் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு வூஹானில் ஏற்பட்ட கொரோனா
China, PLA_Bases, Pakistan, Pentagon, சீனா, ராணுவ தளவாடங்கள், பாகிஸ்தான், இலங்கை, பென்டகன்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளில் ராணுவ தளங்களை நிறுவ சீனா முயற்சித்து வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில், சீனா தொடர்பான ராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து 200 பக்கம் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு வூஹானில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தளவாட தளங்களை அமைப்பதற்கும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மியான்மர் உள்ளிட்ட 12 நாடுகளில் சீனா, ராணுவ வசதிகளை நிறுவுவதற்கும் முயற்சித்து வருகிறது. சீனாவின் கிட்டத்தட்ட 350 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், 130 பெரிய மேற்பரப்பு போர் விமானங்களை உள்ளடக்கியது, அமெரிக்க கடற்படையின் படை நிலை 293 போர்க்கப்பல்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளன.


latest tamil news


தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை சீனாவின் ராணுவ தளங்களை அமைப்பதற்கான பிற நாடுகளாகும். இந்த நாடுகளில் ராணுவ தளம் மற்றும் தளவாட உள்கட்டமைப்பை வலுவாக்க சீனா திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த நாடுகளில் ராணுவத்தை நிறுத்தி, சீனா தனது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் நிலைநாட்ட விரும்புகிறது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது ராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
04-செப்-202007:23:23 IST Report Abuse
NicoleThomson யாரு பெரியண்ணன் என்பது தான் இன்று நடக்கும் போட்டி , அன்று சோவியத் மற்றும் அமெரிக்க , இன்று சீனா மற்றும் அமேரிக்கா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-செப்-202004:04:42 IST Report Abuse
J.V. Iyer இதுபோன்ற செயல்களால் மூன்றாம் உலக யுத்தத்திற்கு இந்த நாடு ப்ரயத்தனப்படுகிறது.
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
04-செப்-202000:12:08 IST Report Abuse
g.kumaresan 350 கப்பல் சரி.அதில் எத்தனை ஒரிஜினல் எத்தனை டூப்ளிகேட்.சீனா ,திராவிடர் முன்னேற்ற கழகம் ரெண்டும் ஒன்னு .ஒரிஜினல் மூளை கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X