அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: திமுக.,வின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. மேலும், பொருளாளராக இருந்த துரைமுருகனும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியானதாக
DMK, DuraiMurugan, TR_Baalu, திமுக, பொதுச்செயலாளர், பொருளாளர், துரைமுருகன், டிஆர் பாலு, போட்டியின்றி, தேர்வு

இந்த செய்தியை கேட்க

சென்னை: திமுக.,வின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. மேலும், பொருளாளராக இருந்த துரைமுருகனும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பொதுச்செயலர் மற்றும் பொருளாளர் பதவிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக.,வில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செப்.,3) மாலை 4 மணியுடன் முடிவடைந்த நிலையில், காலையில் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, பிற்பகல் 3:30 மணியளவில் பொதுச்செயலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்மனுத் தாக்கல் செய்தனர்.


latest tamil news


தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்பு மனுவையும் முன்வைப்புத் தொகையையும் கட்டி இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை தவிர வேறு யாரும் வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யாத நிலையில், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. ஆனால் நாளை வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகே இறுதிப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
04-செப்-202012:56:05 IST Report Abuse
ponssasi இது எல்லாம் சும்மாதான், தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தகவல் சொல்லத்தான். எல்லா கையேழுத்தையும் ஒரு குடும்பம் மட்டுமே போடமுடியால அதனால கையேழுத்து போட இரண்டு நபர்கள் நியமிச்சி இருக்காங்க. அவங்களுக்கு சம்பளத்துக்கு பதிலா பதவி கொடுக்கப்பட்டுள்ளது, அவளவுதான் இதில் இதை பிடிக்க, T.R.பாலு பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் என நம்பத்தகுந்த தகவல்கள், பண பெரு முதலைகள் ராசா, பொண்ணுமுடி, வேலு, ஜெகத்ரட்சகன் போன்றோர் சரிகட்டப்பட்டனர். அந்த முதலையும் லாபத்தையும் எப்படி எடுப்பர் என தெரியவில்லை. தீ மு க கணக்கே தனிதான்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-செப்-202005:29:55 IST Report Abuse
meenakshisundaram ஆஹா இனிமே தான் இந்த ரெண்டு பேருக்குமே போட்டி ஆரம்பிக்கும்
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
03-செப்-202023:07:40 IST Report Abuse
G.Kirubakaran திமுகவில் ஜன நாயகம் எதிர் பார்க்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X