பொது செய்தி

இந்தியா

கொரோனா பரிசோதனையில் புதிய மைல்கல்: ஒரே நாளில் 11 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 11,72,179 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து, மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4,55,09,380 ஆக அதிகரித்துள்ளது.இதனை தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி மருத்துவ கவுன்சில், தினசரி கொரோனா பரிசோதனை 10 லட்சத்தை தாண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சகம் டுவிட்டரில்
Record, tests, India, achieves,milestone, COVID-19, fight, கொரோனா, பரிசோதனை, மைல்கல்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 11,72,179 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனையடுத்து, மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 4,55,09,380 ஆக அதிகரித்துள்ளது.

இதனை தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி மருத்துவ கவுன்சில், தினசரி கொரோனா பரிசோதனை 10 லட்சத்தை தாண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


latest tamil news


சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கணக்கிட முடியாத அளவு கொரோனா பரிசோதனையை இந்தியா மேற்கொண்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,70,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட கால இடைவெளியில், அதிகளவு பரிசோதனை செய்வதன் மூலம், பாதிக்கப்படுபவர்களை விரைந்து கண்டறிந்து தனிமைபடுத்தவும், மருத்துவமனையில் அனுமதிக்கவும் முடிகிறது. இதனால், உயிரிழப்பு விகிதம் குறைகிறது என தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.75 சதவீதமாக குறைந்துள்ளது. குணமடைபவர்களின் விகிதம் 77.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
03-செப்-202017:57:16 IST Report Abuse
Apposthalan samlin இந்த சோதனைகளை கைவிட வேண்டும் . காரோண நினைக்கிற மாதிரி ஆட்கொல்லி நோய் கிடையாது. விபத்துகளால் ஒரு வருடத்தில் இருப்போர் நாலரை லட்சம் ,தற்கொலையால் இரப்பவர் ஒண்டரை லட்சம் எல்லாத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கொரோனாவில் இறப்போர் ஒரு சதவீதம்.லாக் டவுன் லாக் டவுன் என்று போட்டு மக்களை வதைக்க கூடாது . காரோண வந்து விட்டு போனால் நம் உடல் எதிர்ப்பு சக்தி பெற்று விடும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். இங்கே லாக் டௌனும் கிடையாது டெஸ்டிங்கும் கிடையாது அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனை செல்கிறார்கள் கொரோனவை பற்றி யாரும் கவலை படுவது கிடையாது .அநேக நாடுகள் இதே மாதிரி கையாளுகின்றன. நாம் விழித்து எல்லா விட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் பின் தங்கி விடுவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X