பப்ஜி உள்ளிட்ட செயலிகளுக்கு தடை: சீனா எதிர்ப்பு

Updated : செப் 03, 2020 | Added : செப் 03, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
பப்ஜி, செயலி, சீன செயலி, இந்தியா, மத்திய அரசு, தடை, சீனா எதிர்ப்பு, China, oppose, India,  ban, Chinese mobile apps

பெய்ஜிங்: பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வர்த்தகத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காவோ பெங்க் கூறியதாவது: இந்தியாவின் நடவடிக்கை சீன முதலீட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குபவர்களின் சட்ட உரிமையை மீறுகிறது. இந்திய நுகர்வோரின் நலன்களையம் பாதிப்பதுடன், திறந்த பொருளாதாரத்தில் இந்தியாவில் முதலீடு செய்வதையும் பாதிக்கிறது. இந்தியா தனது தவறை திருத்தி கொள்ள வேண்டும்.


latest tamil news


தேசிய பாதுகாப்பு எனக்கூறி, பாகுபாடு காட்டி சீன நிறுவனங்கள் தடை செய்கின்றன. இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக மையத்தின் விதிகளை மீறியதாகும். இந்தியா சீனா இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு பரஸ்பர நலன்களை சார்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு நேற்று(செப்.,2) 'பப்ஜி, கட் கட், ரைஸ் ஆப் கிங்டம்' உட்பட, 118 சீன செயலிகளுக்கு, தடை விதித்தது. இது தொடர்பான அறிவிப்பை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு, '69ஏ'யின் கீழ், இந்த தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
04-செப்-202012:33:34 IST Report Abuse
ponssasi எல்லா விளையாட்டிலும் எல்லை மீறிய ஆபாச விளம்பரம்.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
03-செப்-202021:04:02 IST Report Abuse
BALU அடிப்படை அறிவற்ற அடிமடையர்கள் சைனாவுக்கு சப்போர்ட் செய்யும் துரோகிகளெல்லாம் புணைப்பெயர் வைத்துக் கொண்டு விமர்சனம் செய்கிறார்கள்
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
03-செப்-202019:34:07 IST Report Abuse
thulakol மிகவும் பாராட்ட தக்க செயல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X