பொது செய்தி

தமிழ்நாடு

இறப்பிலும் இணைபிரியா தம்பதி

Added : செப் 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோவை : திருமணத்தில் இணைந்து, 43 ஆண்டுகளை கடந்த தம்பதி, இறப்பிலும் இணைந்தனர்.கோவை சுந்தராபுரத்தை அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் ஒன்று பகுதியை சேர்ந்தவர், மணி, 74. தனியார் அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினி, 72; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டது. மகள் அம்பிகா கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:30
 இறப்பிலும் இணைபிரியா தம்பதி

கோவை : திருமணத்தில் இணைந்து, 43 ஆண்டுகளை கடந்த தம்பதி, இறப்பிலும் இணைந்தனர்.

கோவை சுந்தராபுரத்தை அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் ஒன்று பகுதியை சேர்ந்தவர், மணி, 74. தனியார் அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினி, 72; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டது. மகள் அம்பிகா கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு சரோஜினி இறந்தார். இதை கேட்ட கணவர் மணி அதிர்ச்சியடைந்து மயங்கினார். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு இறந்தார். இருவரும், 1977ல் திருமணமாகி வாழ்வில் இணைந்துள்ளனர். 43 ஆண்டுகள் கடந்து, மரணத்திலும் இணைந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் நான் 2013 இல் புனைந்த கவிதை இதோ - ஒண்ணாவே போகணும்னு பின்னாடி வந்தவங்க முன்னாடி போகணும்னு முருகனை வேண்டினாங்க முன்னாடி வந்த நான் பின்னாடி போகணுமாம் பின்னாடி முன்னாடி என்னாடி ஒண்ணடி மண்ணடியா ஒண்ணாவே போகணும்னு வேண்டினேன் அவனை.
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
05-செப்-202018:27:38 IST Report Abuse
KavikumarRam ஓம் சாந்தி.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
05-செப்-202015:33:09 IST Report Abuse
INDIAN Kumar தம்பதியராக இறக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X