வழி தவறிய சீனர்களை மீட்டு உணவு, ஆக்சிஜன் அளித்த இந்திய ராணுவம்!

Updated : செப் 05, 2020 | Added : செப் 05, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
கேங்டாக்: சீன ராணுவம் லடாக்கின் இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்து வரும் பதற்றமான சூழலில், சிக்கிமில் ஒரு பெண் உட்பட மூன்று சீனர்கள் வழி தவறி 17,500 அடி உயர மலையில் தவித்ததை அறிந்து இந்திய ராணுவம் அவர்களை மனிதாபிமானத்துடன் மீட்டுள்ளது.இந்திய - சீன எல்லையில் கடந்த ஒரு வாரமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா அதிகளவிலான படைகளை குவித்து வருகிறது.

கேங்டாக்: சீன ராணுவம் லடாக்கின் இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்து வரும் பதற்றமான சூழலில், சிக்கிமில் ஒரு பெண் உட்பட மூன்று சீனர்கள் வழி தவறி 17,500 அடி உயர மலையில் தவித்ததை அறிந்து இந்திய ராணுவம் அவர்களை மனிதாபிமானத்துடன் மீட்டுள்ளது.latest tamil news
இந்திய - சீன எல்லையில் கடந்த ஒரு வாரமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா அதிகளவிலான படைகளை குவித்து வருகிறது. அவர்களை ஆக்கிரமிக்க விடாமல் தடுக்கும் பணியில் இந்திய ராணுவம் இறங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இது போன்ற ஒரு மோதலின் போது 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news
சீனாவின் எல்லைகளை மாற்றி ஆக்கிரமிக்கும் மனப்பான்மை இந்திய ராணுவத்தினருக்கு ஆத்திரத்தை மூட்டினாலும், அதனை சீன நாட்டினர் மீது அவர்கள் காட்டவில்லை. அவர்களை மிகுந்த மனிதாபிமானத்தோடு நடத்திய சம்பவம் ஒன்று சிக்கிமில் நடந்துள்ளது.


latest tamil news
வடக்கு சிக்கிமில் ஒரு பெண் உட்பட 3 சீனர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு காரில் திரும்பும் போது வழிதவறி 17,500 அடி உயர மலையில் கடும் குளிரில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாக அங்கு சென்று ஆபத்தான நிலையில் இருந்த சீனர்களை மீட்டு அவர்களுக்கு ஆக்சிஜன் அளித்து, உணவு வழங்கி, குளிர் தாங்கும் உடைகளையும் தந்துள்ளனர். பின்னர் பத்திரமாக அவர்களது இருப்பிடம் செல்ல உதவியுள்ளனர்.இத்தகவலை ராணுவத்தின் மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-செப்-202009:51:38 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஐயா இதுதான் இந்தியர் பண்பாடு க்ளாசிச்சாராம் எல்லாம் பகைவனுக்கும் அருள்வார்கள் வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
06-செப்-202005:13:42 IST Report Abuse
Siva Kumar இங்கு நம் ராணுவம் வழி தவறி வந்த சீனர்களுக்கு உணவு கொடுத்து அனுப்பி வைக்கிறது. ஆனால் அருணாச்சல பிரதேஷ் எல்லையில் சீன ராணுவம் நம் மக்களை கடத்தி கொண்டு போகிறது.
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
05-செப்-202022:30:47 IST Report Abuse
adalarasan நம், ராணுவம் மனிதாபத்தோடு செயல் படுகிறது,அதே சமயம், சீனா இன்று ஆறு, இந்தியர்களை, அருணாச்சல, எல்லையில் கடத்தி சென்றது என்ற செய்தியும் வந்துள்ளது..?சீன மனிதாபமற்ற,வெறியர்கள்..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X