பாகிஸ்தானில் வசிக்கும் ஒரே ஆண் யானை: அதுவும் பரிதாபத்தில்

Updated : செப் 05, 2020 | Added : செப் 05, 2020 | கருத்துகள் (9) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ள ஆண் யானை (காவன்) தான் தற்போது அந்நாட்டிலுள்ள ஒரே யானை. அதுவும் தற்போது உடல்நிலை பரிதாபமாக பாதிப்பு அடைந்துள்ளது.யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு 1985ம் ஆண்டில் ஒரு வயாதான காவன் என்றழைக்கப்பட்ட யானையை இலங்கை அன்பளிப்பாக வழங்கியது. அதற்கு துணையாக 1990ம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானையும்

இஸ்லாமாபாத்: பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ள ஆண் யானை (காவன்) தான் தற்போது அந்நாட்டிலுள்ள ஒரே யானை. அதுவும் தற்போது உடல்நிலை பரிதாபமாக பாதிப்பு அடைந்துள்ளது.latest tamil news


யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு 1985ம் ஆண்டில் ஒரு வயாதான காவன் என்றழைக்கப்பட்ட யானையை இலங்கை அன்பளிப்பாக வழங்கியது. அதற்கு துணையாக 1990ம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானையும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு யானைகளும் ஜோடியாக இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலையில் வாழந்து வந்த நிலையில் 2012ம் ஆண்டு சஹோலி உயிரிழந்தது.

அதற்குப் பிறகு தனிமையில் வாடிய காவன் விரக்தியுடன் காணப்பட்டு வந்தது. யானைகள் பொதுவாக மிதவெப்பநிலையில் வாழ்பவை. பாக்., நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையால் காவனின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு அடைந்தது. 2015ம் ஆண்டுவாக்கில் அது மூர்க்கத்தனம் அடைந்தது. எனவே அதை சங்கிலியால் கட்டி வைத்தனர். தனிமை காரணமாக விரக்தியடைந்த யானை சுவரில் முட்டிக்கொண்டு நிற்பது போல புகைப்படம் வெளியாகி உலகெங்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இப்புகைப்படம் ஏற்படுத்திய அதிர்வலையால் யானைய விடுவிக்க வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எழுந்தது. புகழ்பெற்ற பாப் பாடகியான செர் கூட காவன் யானையை விடுவிக்க வேண்டும் அல்லது அதற்கு துணையாக பெண் யானையை அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது தொடர்பாக பாக்., நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யானையை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் மே மாதத்தில் தீர்ப்பளித்தனர்.


latest tamil newsஇதையடுத்து யானையை கம்போடியாவில் உள்ள சரணாலயத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சோர்வடைந்துள்ள யானையை மீட்க பாடல்களை கேட்கவைத்து நட்பை உருவாக்க ஃபோர் பாஸ் எக்ஸ்பெர்ட்ஸ் தன்னார்வலர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
07-செப்-202012:55:27 IST Report Abuse
Sampathkumar Sampath அந்த பயலுகளுக்கு என்ன தெரியும் ?????
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
06-செப்-202010:56:12 IST Report Abuse
தமிழ்வேள் பாக்கி மூர்க்கர்கள் அதற்கும் ........ செய்துவிட்டிருக்கப் போகிறார்கள் ..விவஸ்தை இல்லாத ஒரு மதம் அதை பிடித்து தொங்கும் ஒரு நாடு ..
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-செப்-202017:56:05 IST Report Abuse
Malick Rajaகலப்பின உற்பத்தியின் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும் .. வானத்தை நோக்கி கல்லெறியும் கயவர் கூட்டம் விளங்க வாய்ப்பில்லை .அதற்கான அறிவும் இல்லை என்பது உறுதி .....
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202005:19:01 IST Report Abuse
rajesh இங்கே மட்டும் என்ன வாழுதாம் அனைத்து கோவில்களிலும் பெண் யானை மட்டும் தான் உள்ளது அதை பிச்சை எடுக்க விட்டுட்டு இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள் அந்த பெண் யானையின் sex வாழ்க்கை பூஜ்யம்... பல கோவில்களில் யானைகள் வாழ்க்கையில் எந்த ஒரு சுதந்திரமும் இல்லாமல் சாகின்றன .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X