தொழில் நடத்த ஏற்ற மாநிலங்கள் பட்டியல்; ஆந்திரா முதலிடம்!

Updated : செப் 05, 2020 | Added : செப் 05, 2020 | கருத்துகள் (20) | |
Advertisement
புது டில்லி: வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம், தொழில் நடத்த ஏற்ற மாநிலங்கள் தரவரிசையை இன்று (செப்., 05) வெளியிட்டது. அதில் இந்தாண்டும் ஆந்திரா முதலிடத்தை தக்க வைத்துள்ளது .தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை 2015-ம் ஆண்டு, மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டத்தை உருவாக்கியது. தொழில் தொடங்குவதை மாநிலங்களுடன் இணைந்து எளிதாகவும், விரைவானதாகவும்

புது டில்லி: வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம், தொழில் நடத்த ஏற்ற மாநிலங்கள் தரவரிசையை இன்று (செப்., 05) வெளியிட்டது. அதில் இந்தாண்டும் ஆந்திரா முதலிடத்தை தக்க வைத்துள்ளது



latest tamil news


.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை 2015-ம் ஆண்டு, மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டத்தை உருவாக்கியது. தொழில் தொடங்குவதை மாநிலங்களுடன் இணைந்து எளிதாகவும், விரைவானதாகவும் ஆக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநில தொழில் வளர்ச்சியையும் அளவிட்டு ஆண்டு தோறும் தரவரிசை வழங்குகின்றனர். மார்ச் மாதமே வெளியாக வேண்டிய 2019-ம் ஆண்டுக்கான தரவரிசை, கொரோனாவால் தள்ளிப்போய் இன்று வெளியாகியிருக்கிறது.

தொழில் தொடங்கி நடத்த, ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திராவே இந்த ஆண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. 12-வது இடத்திலிருந்த உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. இரண்டாம் இடத்திலிருந்த தெலங்கானா மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இவை தவிர டாப் 10 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் ஆகியவை உள்ளன. இதில் தமிழகம் இடம்பெற வில்லை. கட்டுமான அனுமதி, தொழிலாளர் ஒழுங்குமுறை, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்களை அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை மற்றும் ஒற்றை சாளர அமைப்பு போன்ற அளவீடுகளை கொண்டு இந்த தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news



இப்பட்டியலை வெளியிட்டு பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், 'தொழிலை விரைவாகவும், சிக்கனமானதாகவும் மாற்ற ஒற்றை சாளர அமைப்பு, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள், தகராறு சட்டத்தில் சீர்திருத்தங்கள் போன்ற முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மோடியின் தன்னிறைவு இந்தியா திட்டம் காரணமாக இந்தியா வலுவானதாகும்.' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-செப்-202011:03:04 IST Report Abuse
Natarajan Ramanathan இரண்டு நண்பர்கள் சேர்ந்து சுமார் முப்பது பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய சிறுதொழில் தொடங்க நினைத்து அரசு அனுமதிக்கு முயற்சித்தபோது சிவாஜி படம் போல 14% சதம்வரை கமிஷன் எதிர் பார்த்தார்கள். வெறுத்துப்போய் சித்தூரில் ஆரம்பித்து மிக நன்றாக நடந்துவருகிறது.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
06-செப்-202010:35:20 IST Report Abuse
பாமரன் அய்யோ... அய்யய்யோ... அய்யய்யய்யய்யோ... உபி ரெண்டாவது எடமாம்ல....🤔🤔 தமிழ் நாடு மற்றும் கர்நாடகா லிஸ்டில் வரக்கூட தகுதி இல்லாத நிலை...🤐 அப்போ உபியில் இருந்து தொழிலாளிகள் நம்ம ஊருக்கு வரமாட்டாங்களா...🤭🤭
Rate this:
Cancel
06-செப்-202010:32:09 IST Report Abuse
ஆரூர் ரங் திமுக😎 ஜகத்தே😎 சிங்கள நாட்டில்தான் 28000 கோடி முதலீடு போட்டிருக்க்காரு. அவங்களுக்கே தமிழன் மீது நம்பிக்கையில்லை. அவரோட தயாரிப்பு சரக்கையே அடித்துவிட்டு அவர்து ஆலை வாசலிலேயே உபஸ் வம்பு பண்ணுவான்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும்
Rate this:
06-செப்-202011:29:42 IST Report Abuse
பாமரன்ஏனுங்க ரங்கிடு... இதே பல்லவியை ரொம்ப நாளாக பாடறீங்க... இலங்கை டாக்ஸ்ஹெவன் கிடையாது... நம்ம நாட்டுல இருந்து இவ்ளோ பெரிய தொகையை ஈசியா கொண்டு போகவோ கொண்டு வரவோ முடியுமா என்ன... நீர்தான் எல்லாம் தெரிஞ்ச ஞானியாச்சே ... சொல்லுங்க ஓய்... அப்புறம் நம்ம ஏவல் துறையில் என்ன பண்ணுறாங்கலாமாம் 🙄🙄 கட்டிங் வாங்கி குடுத்துட்டு புள்ளபுடிக்கறதுக்கு ஹெல்ப் பண்ண போயிட்டாங்களா...🤔🤔...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X