சீன ராணுவ அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்பு!

Updated : செப் 07, 2020 | Added : செப் 05, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: ''எல்லையில் சீன படைகள் தான் அத்துமீறுகின்றன. இந்திய இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. எல்லையில் தற்போது நிலவும் சூழலை மாற்றி, தன்னிச்சையாக செயல்படும் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்,'' என, சீன ராணுவ அமைச்சரிடம், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.சமீப காலமாக, இந்திய - சீன எல்லையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன
'எல்லை மீறக் கூடாது' சீன அமைச்சருக்கு ராஜ்நாத், எச்சரிக்கை

புதுடில்லி: ''எல்லையில் சீன படைகள் தான் அத்துமீறுகின்றன. இந்திய இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. எல்லையில் தற்போது நிலவும் சூழலை மாற்றி, தன்னிச்சையாக செயல்படும் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்,'' என, சீன ராணுவ அமைச்சரிடம், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக, இந்திய - சீன எல்லையில், காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. ஜூனில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறலை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.இதனால், எல்லையில் பதற்றம் நிலவியது. இரு தரப்பும் படைகளை குவித்ததால், போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


நேரடிப் பேச்சுஇந்நிலையில், சமீபத்தில், லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில், சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது; இதை, நம் வீரர்கள் முறியடித்தனர். இந்த பரபரப்பான சூழலில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, நம் ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் சென்றிருந்தார். சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கியும் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தார். அப்போது, இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு தீர்வு காண்பது குறித்து, இரு நாட்டு ராணுவ அமைச்சர்களும் நேரடியாக பேச்சு நடத்தினர்.

இருவருக்கும் இடையே, இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேச்சு நடந்தது. எல்லையில் பதற்றமான சூழல் உருவானதற்கு பின், இரு நாடுகளின் முக்கிய அமைச்சர்கள் நேரடியாக பங்கேற்ற முதல் சந்திப்பு என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்த சந்திப்பின் போது, எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுவதாக, அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன ராணுவ அமைச்சரிடம் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

இது குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லையில் ஏற்கனவே உள்ள சுமுகமான சூழலை மாற்றி, தன்னிச்சையாக செயல்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், பேச்சில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறும் வகையில், எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது.


'உணருங்கள்!'இந்திய படையினருக்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் சீன ராணுவம் தொடர்ந்து ஈடுபடுகிறது. எல்லை பிரச்னையை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
படைகளை மேலும் மேலும் குவிப்பதால், பதற்றம் அதிகரிக்கும் என்பதை சீன தரப்பு உணர வேண்டும். இந்திய இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில், இந்திய படைகள் உறுதியாக உள்ளன.ராணுவ அதிகாரிகள் அளவிலும், துாதரக அதிகாரிகள் அளவிலும், இரு தரப்பும் தொடர்ந்து பேச்சு நடத்துவதன் வாயிலாக, எல்லையில் அமைதியை ஏற்படுத்த முடியும்
.

எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை, சீனா வாபஸ் பெற வேண்டும். எந்தவிதமான அத்துமீறலிலும், சீன படைகள் ஈடுபடக் கூடாது.பிரதமர் மோடிக்கும், சீன அதிபருக்கும் இடையே ஏற்கனவே நடந்த பேச்சில், சில உடன்பாடுகள் எட்டபட்டுள்ளன. இதன் அடிப்படையில் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்.இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை, பிரச்னையாக மாற்ற முயற்சிக்கக் கூடாது.எல்லை பிரச்னையை கையாளுவதில், இந்திய ராணுவம் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது.


'அத்துமீறல் ஏன்?'அதேநேரத்தில், இந்திய இறையாண்மையை பாதுகாப்பதில் எந்த சமரசத்துக்கும், இந்திய ராணுவம் இடம் கொடுக்காது. பாங்காங் ஏரி பகுதியில், சீன ராணுவம் திடீரென படைகளை குவித்து அத்துமீறியதே, சமீபத்திய பதற்றத்துக்கு காரணம்.இவ்வாறு, சீன அமைச்சரிடம், ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் கூறியதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


மத்திய ஆசிய நாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சுமாஸ்கோவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளின் ராணுவ அமைச்சர்களுடன், இரு தரப்பு உறவு, ராணுவ ரீதியிலான நட்பு குறித்து பேச்சு நடத்தினார்.
ராணுவ உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து, இந்த நாடுகளின் அமைச்சர்களுடன், ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவ அமைச்சர்களுடன் நடத்திய பேச்சு, ஆக்கப்பூர்வமாக இருந்தது' என, தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த மாநாடு, மூன்று நாட்கள் நடக்கிறது.


அருணாச்சலில் 5 பேரை சீன ராணுவம் கடத்தியதாக புகார்அருணாசல பிரதேசத்தில், வேட்டைக்கு சென்ற ஐந்து பேரை, சீன ராணுவம் கடத்திச் சென்றதாக, அவர்களது குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.வடகிழக்கு மாநிலமான அருணாச்சலில், முதல்வர் பெமா காண்டு தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மேல்சுபான்சிரி மாவட்டத்தில், நாசோ அருகில் உள்ள வனப்பகுதியில், வேட்டைக்குச் சென்ற ஐந்து பேரை, சீன ராணுவம் கடத்திச் சென்றதாக அவர்களது குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட ஐந்து பேருடன் மேலும், இருவர் இருந்துள்ளனர். அவர்கள், சீன ராணுவத்திடம் இருந்து தப்பி வந்துள்ளனர். அவர்கள் தெரிவித்த பின்தான், கடத்தல் சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இது குறித்து, மேல்சுபான்சிரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தரு குஸ்ஸார் கூறுகையில், ''நாசோ காவல் நிலைய அதிகாரியை, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, உண்மை நிலவரம் பற்றி அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும், ஐந்து பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,'' என்றார்.இது குறித்து,மேற்கு பாசிகட் எம்.எல்.ஏ., நிநோங் எரிங், 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில், 'வேட்டைக்காரர்களைக் கடத்திச் சென்றிருக்கும், சீன ராணுவத்துக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


சீன அமைச்சர் குற்றச்சாட்டுநம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கி நடத்திய பேச்சு குறித்து, சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய ராணுவ அமைச்சருடன், சீன ராணுவ அமைச்சர் நடத்திய பேச்சில், எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லையில் தற்போது நிலவும் பதற்றத்துக்கு, இந்தியாவே முழுப் பொறுப்பு என, சீன ராணுவ அமைச்சர் திட்டவட்டமாக கூறினார். 'எங்கள் நாட்டுக்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். சீன இறையாண்மையை பாதுகாப்பதில், சீன ராணுவம் உறுதியாக உள்ளது' என்றும், இந்திய அமைச்சரிடம், வெய் பெங்கி உறுதியுடன் தெரிவித்தார்.இந்திய பிரதமருக்கும், சீன அதிபருக்கும் இடையே நடந்த பேச்சின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியா முன் வர வேண்டும் என்றும் வெய் பெங்கி கூறினார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் காங். வலியுறுத்தல்இந்திய - சீன எல்லை பிரச்னை குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:எல்லை விவகாரத்தில், சீனாவுக்கும், நமக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து, இது தொடர்பாக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, அந்த சந்தேகத்தை போக்கி, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரதமரும், ராணுவ அமைச்சரும் செயல்பட வேண்டும்; இது தான் ராஜ தர்மம்.சீனாவின் ராணுவ அதிகாரிகள், ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சருடன், நம் தரப்பினர் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றனர். இதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை, பிரதமரும், ராணுவ அமைச்சரும், மக்களுக்கு விளக்க வேண்டும். இவர்களது பதிலுக்காக நாட்டு மக்களும், நாங்களும் காத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06-செப்-202020:34:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்த நிமிஷம் வரையிலே நம்ம நாட்டுலே ஏவாளும் எந்த எள்ளையேயும் ஆக்ரமிச்சதே இல்லீங்க சுதந்திரகிடைச்சு 73வருஷங்களே வந்தால் உதைப்போம் அடிச்சுவெரட்டுவோம் சீனாக்காரனும் பாகிஸ்தானும் ரொம்பவே தான் துள்ளுறானுக நிச்சயம் நம்ம ராணுவம் விமானப்படையின் வீரம் தெரியாமல் மோதினால் அவ்ளோதான் இளவேமுடியாது
Rate this:
Cancel
06-செப்-202010:18:15 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) நம்ம ஊரு சினிமா பைத்தியங்களுக்கு ஐந்து ரூபாய் நடிகர் கத்தி பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் போல ???
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
06-செப்-202009:51:57 IST Report Abuse
veeramani சீனாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ள ஒரு கட்சியினர் , இந்தியாவின் இறையாண்மை பற்றியும் அண்டைநாட்டின் அத்துமீறல் பற்றியும் பேசுவதால் என்ன பலன். முதலில் அவர்கள் நிறுத்தவேண்டும் பின்னர் மற்றவைகளை யோசிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X