பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுப்பற்று,மக்கள் பணியில் அயராத சேவை துணிச்சல் என்றால்'தினமலர்'தான்!

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (77)
Share
Advertisement
'தினமலர்' தேசிய தமிழ் நாளிதழின் முதல் பதிப்பு , கடந்த 1951, செப், 6-ல் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் அவர்களால் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. துணிச்சலான செய்திகளின் வாயிலாக லட்சோப லட்சம் வாசகர்களால் பெரிதும் வா(நே)சிக்கப்பட்டு சென்னை, வேலூர், புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், என பத்து பதிப்புகளாக பரந்து விரிந்து இன்று 70-வது

'தினமலர்' தேசிய தமிழ் நாளிதழின் முதல் பதிப்பு , கடந்த 1951, செப், 6-ல் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் அவர்களால் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. துணிச்சலான செய்திகளின் வாயிலாக லட்சோப லட்சம் வாசகர்களால் பெரிதும் வா(நே)சிக்கப்பட்டு சென்னை, வேலூர், புதுச்சேரி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், என பத்து பதிப்புகளாக பரந்து விரிந்து இன்று 70-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இன்றைய தலைமுறை கண்டிராத வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளின், அன்றைய' தினமலர்' முதல் பக்க பொக்கிஷங்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைக்கப்பட்டிருந்த, அன்றைய நாஞ்சில் நாடான, தற்போதைய குமரி மாவட்டத்தை, தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டக் குரலுடன், திருவனந்தபுரத்தில், 1951 செப்டம்பர், 6 ல், 'தினமலர்' நாளிதழை, டி.வி.ராமசுப்பையர் துவக்கினார்.latest tamil newsநாஞ்சில்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடி, தன் முதல் லட்சியத்தில், 'தினமலர்' நாளிதழ் வெற்றி கண்டது. நாஞ்சில் நாடு தமிழகத்தோடு இணைக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் உருவானதும், திருவனந்தபுரத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு, 'தினமலர்' பதிப்பை மாற்றினார் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். அப்போது, எல்லா நாளிதழ்களும் சென்னையில் இருந்து வெளியாகி கொண்டிருக்க, இதற்கு நேர்மாறாக, நாட்டின் தென் பகுதியில் இருந்து வெளியான, 'தினமலர்' நாளிதழ் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்தது.


latest tamil newslatest tamil news


Advertisement

வெறுமனே தகவல்கள், நிகழ்வுகளை மட்டும் தராமல், மக்களின் தேவைகளுக்காக, குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக, செய்திகளை தந்தது தினமலர். நாட்டின் வளர்ச்சிக்கு, ஒரு நாளிதழின் எழுத்து காரணமான வரலாறே, 'தினமலர்' நாளிதழின் வரலாறு. இந்த, ௭௦ ஆண்டுகளில், நாட்டு நலனுக்காக, மக்கள் பணிக்காக, 'தினமலர்' சிந்தித்ததும், சாதித்ததும் பல. அப்போது, சந்தித்த தடைகற்களை வாசகர்கள் துணையோடு வென்றும் வந்திருக்கிறது.


latest tamil newslatest tamil newsவாசகர்களின் நீங்காத ஆதரவோடு, 1951ல் பிறந்த அதே உத்வேகத்துடனும், துணிச்சலுடனும், 70 ஆண்டுகளை தொட்டு, வெற்றி பயணத்தை தொடர்கிறது.


latest tamil newslatest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
07-செப்-202017:09:10 IST Report Abuse
Sukumar Talpady தினமலர் நாளிதழுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . என்னுடைய பல கருத்துக்கள் தினமலரால் அங்கீகரிக்கப்பட்டு பிரசுரிக்கப் பட்டுள்ளன . நன்றி .
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
07-செப்-202015:44:22 IST Report Abuse
Ramona உண்மையான, நடுநிலையோடு, ஆக்கபூர்வமான, செய்திகளை மக்களுக்கு சேர்த்து நீங்கள் உங்கள் பத்திரிகையின் மூலம் செய்யும் மகத்தான சேவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது, பணத்துக்கு அலையும். பெய்டு மீடியாக்கள் நடுவில் நேர்மையை விட்டு கொடுக்காத, உங்கள் பத்திரிகையின் 70 ஆம் ஆண்டு வாழ்த்துக்கள், உங்கள் பணி நன்றே தொடர வேண்டும் .வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
07-செப்-202015:32:31 IST Report Abuse
Viswam பத்திரிக்கை தர்மத்துடன் தினமும் மலரும் செய்தி பூ இந்த தினமலர். அன்று கண்ட மேனியாக அழியாத மெருகுடன், நடுநிலை வகித்து, எப்போதும் தேசம் முதலென்று நினைவில் செய்திப்பணியை தொடர வாழ்த்துகள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X