அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடுக்க ஆயத்தமாகும் சீனா?

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
பீஜிங்: கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.'கொரோனா வைரசை உலகுக்குப் பரப்பியது சீனாதான்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 'அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கவே சீனாவின் கம்யூனிச அரசு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகிறது' எனவும் கூறியுள்ளார்.

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

'கொரோனா வைரசை உலகுக்குப் பரப்பியது சீனாதான்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், 'அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கவே சீனாவின் கம்யூனிச அரசு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகிறது' எனவும் கூறியுள்ளார்.



latest tamil news




இந்நிலையில் அமேசான் தளத்தில் ஒரு விற்பனையாளர் சீனாவில் தயாரிக்கப்பட்ட விதைகளை விற்றுள்ளார். இந்த விதைகள் அமெரிக்காவில் சில விவசாயிகளின் வீடுகளுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. 'இந்த விதைகளை தாங்கள் அமேசான் தளத்தில் ஆர்டர் செய்யவில்லை' என, வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


latest tamil news



இது அமேசான் நிர்வாகத்திற்குத் தெரியவந்தது. உடனே அந்த விற்பனையாளரை தங்கள் தளத்தில் இருந்து நீக்கியது அமேசான். மேலும், 'இனி இதுபோன்ற தவறு நடக்காது' என, உறுதியளித்தது.


latest tamil news



'அமெரிக்காவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடிமக்களுக்கு இந்த விதைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒருவேளை சீனா, அமெரிக்கா விவசாயத்தை முடக்கவும் உயிரியல் போர் தொடுக்கவும் திட்டமிட்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம்' என, அமெரிக்க விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இந்த விதைகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கடுகு, ரோஸ்மேரி, லாவண்டர், செம்பருத்தி, ரோஜா, புதினா உள்ளிட்ட 14 வகையான விதைகள் இந்த பாக்கெட்டில் உள்ளன. 'இதுபோல இலவசமாக கிடைக்கும் விதைகளை அமெரிக்க விவசாயிகள் யாரும் தங்கள் நிலங்களில் பயிர் செய்யவேண்டாம்' என, அமெரிக்க விவசாயத் துறை எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202020:09:34 IST Report Abuse
oce தினமலரின் எழுபதாவது ஆண்டு பிறப்பை கருத்து பலகை வாசிகள் வாழ்த்துவது அவசியம்.தினமலரின் சமுதாய சேவைக்கு நான் தலை வணங்கி வரவேற்பதுடன் அதன் சீரிய மக்கள் பணி நீண்ட நெடுங்காலம் தொடரவேண்டுமென வாழ்த்துகிறேன்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202020:02:26 IST Report Abuse
oce சீனாவின் திமிரை அடக்க வேண்டுமானால் அவன் உற்பத்தி செய்யும் எந்த பொருளையும் எந்த நாடும் வாங்க கூடாது.மேட் இன் தாய்லாந்து என்று பெயரில் தயாராகும் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் சீனாவின் தயாரிப்புகள். தாய்லாந்து காரன் சீன பொருட்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி அப்பொருட்கள் மீது அவனது நாட்டின் பெயர் லேபிலை ஒட்டி அதிக விலைக்கு விற்கிறான். இரண்டு ஊர்க்காரன்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202019:47:12 IST Report Abuse
oce இவன் அமெரிக்கா மீது உயிரியல் போர் தொடங்கினால் அது அமெரிக்காவை மட்டும் தாக் காது.உலகம் அனைத்தையும் தாக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X