‛அதிகக் கடன் பெற்று மக்களுக்குக் கொடுங்கள்: பொருளாதாரத்தை உயர்ந்த ப.சிதம்பரம் ஐடியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

‛அதிகக் கடன் பெற்று மக்களுக்குக் கொடுங்கள்': பொருளாதாரத்தை உயர்ந்த ப.சிதம்பரம் ஐடியா

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | கருத்துகள் (60)
Share
புதுடில்லி: 'அதிகமாகக் கடன் பெற்று, மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள். பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு வந்துவிடும்' என, மத்திய அரசுக்கு காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரைகள் வழங்கியுள்ளார். கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9

புதுடில்லி: 'அதிகமாகக் கடன் பெற்று, மக்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள். பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு வந்துவிடும்' என, மத்திய அரசுக்கு காங்., மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.latest tamil news


கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய அரசை காங்., கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை மீண்டும் மீட்சிப் பாதைக்குக் கொண்டுவருவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு பணத்தைத் திரட்டிக்கொள்ள சில வழிமுறைகளைக் கூறுகிறேன்.
இந்த ஆண்டு நிதிப் பொறுப்பையும் பட்ஜெட் மேலாண்மையையும் சற்று தளர்த்தி அதிகமாகக் கடன் பெறுங்கள். அரசு நிறுவனங்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகள் விற்பதை விரைவுபடுத்துங்கள். உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவை அளிப்பதாகத் தெரிவித்துள்ள 6,500 கோடி டாலர் நிதியை பயன்படுத்துங்கள். கடைசி முயற்சியாக, பற்றாக்குறையின் ஒரு பகுதியைப் பணமாக அச்சிடுங்கள்.


latest tamil newsநாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடவும், சந்தையில் தேவையை, நுகர்வை அதிகரிக்கவும் சில உறுதியான நடவடிக்கைகள் தேவை. நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களில் 50 சதவீதம் பேருக்கு நேரடியாகப் பணத்தை வழங்கிடுங்கள். நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவசமாக உணவு தானியத்தை வழங்கிடுங்கள். தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளட்டும்.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிடுவதை அதிகப்படுத்துங்கள். உணவு தானிய இருப்பைப் பயன்படுத்தி ஊதியம் வழங்கிடுங்கள். மிகப்பெரிய அளவில் பொதுப் பணிகளைத் தொடங்கிடுங்கள். வங்கிகளுக்குத் தேவையான மறு முதலீடுகளை வழங்கிடுங்கள். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகையை வழங்குங்கள். இவை அனைத்துக்கும் பணம் தேவை. ஆகவே, கடன் பெறுங்கள். தயக்கம் காட்டாதீர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X