பொது செய்தி

இந்தியா

ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதல்

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020
Share
Advertisement
புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ல் துவங்கும் முதல் லீக் போட்டியில், சென்னை , மும்பை அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமீரேட்சில் செப்., 19 முதல் நவ.10 வரை நடக்க உள்ளது. 53 நாட்களில் 60 போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக யு.ஏ.இ., சென்ற அணிகள் பயிற்சியை துவக்கியுள்ளன. இதனால், தொடர் அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு
ipl, Indian Premier League, cricker, ஐபிஎல்,  இந்தியன் பிரிமீயர்லீக், போட்டி அட்டவணை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 19ல் துவங்கும் முதல் லீக் போட்டியில், சென்னை , மும்பை அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமீரேட்சில் செப்., 19 முதல் நவ.10 வரை நடக்க உள்ளது. 53 நாட்களில் 60 போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக யு.ஏ.இ., சென்ற அணிகள் பயிற்சியை துவக்கியுள்ளன. இதனால், தொடர் அட்டவணை எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், லீக் சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, 46 நாட்களில் 56 லீக் போட்டிகள் நடக்கின்றன. அதில் 10 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடக்க உள்ளன. துபாயில்24, அபுதாபியில் 20, சார்ஜாவில் 12 லீக் போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்கும். இரண்டு போட்டிகள் நடக்கும் நாட்களில் முதல் போட்டி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு துவங்கும்.

19ம் தேதி அபுதாபியில் துவங்கும் முதல் லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. 'பிளே ஆப்' மற்றும் பைனலுக்கான இடம் உள்ளிட்ட விவரம் பின்னர் அறிவிக்கப்படும்


அட்டவணை



latest tamil news




latest tamil news




latest tamil news




latest tamil news



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X