கொரோனா தரும் மன அழுத்தம்: - 1,000 அரசு மருத்துவர்கள் ராஜினாமா முடிவு!

Updated : செப் 06, 2020 | Added : செப் 06, 2020 | |
Advertisement
லண்டன்: கொரோனா பெருந்தொற்றை அரசு கையாளும் விதம் சரியில்லை, ஒழுங்கான ஊதியமும் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். இங்கிலாந்தில் 3.4 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். குணமடைந்தோர்

லண்டன்: கொரோனா பெருந்தொற்றை அரசு கையாளும் விதம் சரியில்லை, ஒழுங்கான ஊதியமும் கிடைக்கவில்லை போன்ற காரணங்களால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.



latest tamil news



இங்கிலாந்தில் 3.4 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஸ்வீடனின் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இத்தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்கின்றனர்.


latest tamil news



இந்த நிலையில் கொரோனா நெருக்கடி குறித்து இங்கிலாந்து மருத்துவர்கள் சங்கம், அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன. 69% மருத்துவர்கள் 'கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. முறையான ஊதிய உயர்வும் அளிக்கப்படாததால் விரக்தியின் விளிம்பிற்கு சென்றோம். இதனால் பலர் ராஜினாமா செய்துவிட்டு மருத்துவ தொழிலிலிருந்து இடைவெளி எடுக்க உள்ளனர். பலர் வெளிநாடு சென்று பணியாற்ற விரும்புகிறார்கள். சிலர் தனியார் மருத்துவமனைக்கு மாற உள்ளனர்.' என கூறினர்.
“எங்கள் பணிகளுக்காக கைதட்டி கவுரவித்ததும், அவர்களின் நடவடிக்கைகளும் முரணானதாக இருந்தது. மருத்துவர்களை இந்த அரசு வெறும் பொருளாக தான் கருதுகிறது. மோசமான ஊதியம், மோசமான நிலைமை, பிபிஇ கிட்கள் பற்றாக்குறை, அரசியல் ஆதாயத்திற்காக வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் 20 ஆண்டுகள் அரசு பணியில் இருந்தவர்களையும் பாதித்துள்ளது.” என்கின்றனர்.
ஏற்கனவே இங்கிலாந்து அரசு மருத்துவமனைகளில் 8,278 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவி விலக முடிவு செய்துள்ளது அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X