சென்னை: வெளியூர் செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் என எஸ்.இ.டி.சி.பொது மேலாளர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்டங்களுக்கிடையே செல்லும் வகையிலான போக்குவரத்திற்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் மாநிலம் முழுவதும் பஸ்கள் இயங்க உள்ளது. இதனிடையே எஸ். இ.டி.சி.,. பொது மேலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாவது: வெளியூர் செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும். அவற்றிற்கு நேரம் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என கூறினார்.

செப்., முழுதும் ஆம்னி பஸ் இயங்காது
சென்னையில் ஆம்னி பஸ் உரிமையாளர்களின் சங்க கூட்டம் நடைபெற்றது அதில் செப்., மாதம் முழுவதும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 100 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும், பஸ்கள் இயக்கப்படாத காலகட்டங்களுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE