தயாராகிவிட்டார் ரஜினி

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020
Share
Advertisement
அரசியலில் நுழைய, இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, விரைவில் கட்சி துவங்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆயத்த வேலைகள், ஏறக்குறைய முடிந்துவிட்டதாம். இதற்காக, பல சீனியர் பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், ரஜினி சமீபத்தில் சந்தித்துள்ளார்.கட்சி துவங்குவது குறித்து அவர்களின் கருத்தைக் கேட்டதோடு, கட்சி துவங்கினால் மக்கள் மனநிலை
delhi ush,  rajini, rajinikanth, poltics, neet, PMmodi, narendramodi, jee, prasant kishore, DMk,stalin, m.k.stalin, sirag paswan, டில்லி உஷ், பிரசாந்த் கிஷோர், திமுக, ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், ரஜினி, அரசியல்,  நீட், போதை, சரத்பவார்

அரசியலில் நுழைய, இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, விரைவில் கட்சி துவங்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆயத்த வேலைகள், ஏறக்குறைய முடிந்துவிட்டதாம். இதற்காக, பல சீனியர் பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், ரஜினி சமீபத்தில் சந்தித்துள்ளார்.கட்சி துவங்குவது குறித்து அவர்களின் கருத்தைக் கேட்டதோடு, கட்சி துவங்கினால் மக்கள் மனநிலை எப்படியிருக்கும் என்றெல்லாம் கேட்டு உள்ளார் ரஜினி. ஏற்கனவே கட்சி துவங்கி இருக்க வேண்டும், கொரோனா பரவலால் தள்ளிப் போய்விட்டது எனவும் அவர்களிடம் சொன்னாராம். தமிழக கட்சிகளின் பெயர்களில் திராவிடம் என்கிற வார்த்தை நிச்சயம் இருக்கும். ஆனால் ரஜினி கட்சியின் பெயரில் இது இருக்காது, ஆன்மிக பெயராக இருக்கும் என, சொல்லப்படுகிறது. ரஜினி என்ன செய்யப் போகிறார், இவருடைய கட்சியால் யாருக்கு லாபம், தங்கள் வாக்கு வங்கியில் ரஜினி கை வைப்பாரா என, டில்லியில் பா.ஜ.,வும் காங்கிரசும் அலசிக் கொண்டிருக்கின்றன.


பிரசாந்த் கிஷோர் கடிதம்?


இன்னும் எட்டு மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் துவங்கி விட்டன. இந்நிலையில் டில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு கடிதம் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது. தி.மு.க., வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து தரும் பிரசாந்த் கிஷோர் பாண்டே, அதன் தலைவர், ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் தான் அது. இந்த கடிதம் உண்மையானதா அல்லது பொய்யா என்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால், அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் பற்றி டில்லி அரசியல் வட்டாரங்களில் அலசப்படுகிறது.தேர்தல் சமயத்தில் தி.மு.க.,விற்கு எதிராக வரக் கூடிய பிரச்னைகள் பற்றி, பிரசாந்த் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம். அதில், 2 ஜி அலைக்கற்றை வழக்கில், டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு, தி.மு.க.,விற்கு எதிராக வரும் வாய்ப்பு; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையாகி வந்தால் ஏற்படும் அரசியல் மாற்றங்கள்; ரஜினியின் அரசியல் வருகை என, மூன்று விஷயங்களை குறிப்பிட்டு, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து பிரசாந்த், அந்த கடிதத்தில் ஸ்டாலினுக்கு விளக்கியுள்ளாராம்.'எது நமக்கு எதிராக இருக்கிறதோ அதையே நமக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும்; இதைத் தான், 2014 பொதுத் தேர்தல் சமயத்தில் குறிப்பிட்டு, மோடிக்கு வியூகம் அமைத்து கொடுத்தேன்; அதையே தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும்' என, சொல்லியிருக்கிறாராம் பிரசாந்த். ஆனால், தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே, இவருக்கு, எதிர்ப்பு, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.


பீஹாரின் உதயநிதி


பீஹாரில் சட்டசபை தேர்தல் அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு பக்கமும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், -காங்கிரஸ்,- பிற உதிரி கட்சிகள் உள்ளிட்ட மஹா கூட்டணி இன்னொரு பக்கமும் போட்டியிட உள்ளன. இப்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கொரோனா பரவலால், இந்த முறை, தேர்தல் பிரசாரம் மந்தமாகத் தான் இருக்கும். வழக்கமாக மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, இம்முறை, 'வீடியோ' மூலமாக பிரசாரம் செய்யவிருக்கிறார். காங்., முன்னாள் தலைவர் ராகுலும் வீடியோ பிரசாரம் செய்ய உள்ளார்.ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, எஸ்.சி., பிரிவினரின் ஓட்டுகளை நிதிஷ் கூட்டணிக்கு அள்ளித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் இப்போது கட்சியின் தலைவராக உள்ளார். கட்சியில் ஆதிக்கம் செலுத்துவது இவர்தான். பீஹார் சட்டசபை தேர்தலில், தங்கள் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என இப்போதே பிரச்னையை ஆரம்பித்துவிட்டார். அதோடு டில்லி தினசரிகளில் முதல் பக்க விளம்பரத்தில் தன் படத்தைப் பெரிதாக போட்டு, அப்பா பஸ்வானின் படத்தை சின்னதாக்கிவிட்டார். ஹிந்தி சினிமாவிலும் நடித்துள்ள சிராக் பஸ்வானை, வட மாநில அரசியல்வாதிகள், பீஹாரின் உதயநிதி என, கிண்டலாக அழைக்கின்றனர்.


கலக்கத்தில் சரத் பவார்ஹிந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு, இப்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இன்னொரு பக்கம், நடிகரின் பணம் எங்கே போனது என, அமலாக்கத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில், போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் விசாரணையில் இறங்கியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் சில காலம் நெருக்கமாக இருந்த நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர், போதைப் பொருள் தடுப்பு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது, மஹாராஷ்டிர அரசியலில் பீதியைக் கிளப்பியுள்ளது. இதுவரை முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவிற்கு, சுஷாந்த் இறப்பில் சம்பந்தம் உள்ளது என, செய்தி அடிபட்டது. இப்போது விசாரணை வேறு விதமாக செல்கிறது. நடிகர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர், அதனால், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இந்த வழக்கில், துவக்கத்தில், ரியா சக்கரவர்த்திக்கு ஆதரவாக பேசி வந்தார் சரத் பவார். ஆனால் இப்போது போதைப் பொருள் விஷயம் வந்துவிட, கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பு வருமோ என, அவர் பயப்படுகிறாராம்.போதைப் பொருள் விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகள் சிக்குவார்கள்; சினிமாவும் போதையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என, தனக்கு நெருக்கமானவர்களிடம், தன் ஆதங்கத்தைச் சொல்லியிருக்கிறார் பவார்.கர்நாடகாவிலும், ஒரு நடிகை, போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள நிலையில், இந்த விசாரணை, தமிழக சினிமா உலகத்தையும் விட்டுவைக்காது என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.


'நீட்' விவகாரத்தில் பிடிவாதம் ஏன்?பிரதமர் மோடி எந்த ஒரு விஷயத்தை செய்தாலும், அதிலிருந்து பின் வாங்க மாட்டார். 'நீட்' தேர்வு மற்றும் ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் படிப்பிற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு ஆகியவற்றை தள்ளி வைக்க வேண்டும் என, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. சில கட்சிகள் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டன.இதனால் பிரச்னை வருமா என யோசித்தாராம் பிரதமர் மோடி. அகில இந்திய மருத்துவ கழக தலைவர்கள் மற்றும் ஐ.ஐ.டி., இயக்குனர்களிடம் பேசியுள்ளார் மோடி. நுழைவுத் தேர்வுகளை தள்ளி வைத்தால் ஓராண்டு வீணாகிவிடும் என, இவர்கள் பிரதமருக்கு ஆலோசனை அளித்துள்ளனர்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு அரசின் முடிவில் உடன்பாடில்லை. இதற்கிடையே உச்ச நீதிமன்றம் நுழைவுத் தேர்வுகளை தள்ளி வைக்கக் கூடாது என தீர்ப்பளித்து, எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது.இந்த விவகாரத்தை காங்கிரசும் மற்ற கட்சிகளும் அரசியல் ஆக்குகின்றன. ஆனால் மாணவர்களின் நலன் கருதி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என பிரதமர் தன் சக அமைச்சர்களிடம் சொன்னாராம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X