தொடர்ந்து எரியும் எண்ணெய் கப்பல்: தீயை அணைப்பதில் சிக்கல்

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020
Share
Advertisement
கொழும்பு; இலங்கை கடற்கரைக்கு அருகே, தீப்பிடித்து எரிந்து வரும் எண்ணெய் கப்பலை, பாதுகாப்பாக மீட்க, சிறப்பு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து, 'எம்.டி., நியூ டைமண்ட்' என்ற, எண்ணெய் கப்பல், 22.8 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இந்தியாவிற்கு புறப்பட்டது. 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்திற்காக, எண்ணெய் எடுத்துச் சென்ற இந்தக்
india, srilanka, oil ship, fire, இந்தியா, இலங்கை, எண்ணெய் கப்பல், தீவிபத்து, அணைக்கும், முயற்சி

கொழும்பு; இலங்கை கடற்கரைக்கு அருகே, தீப்பிடித்து எரிந்து வரும் எண்ணெய் கப்பலை, பாதுகாப்பாக மீட்க, சிறப்பு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து, 'எம்.டி., நியூ டைமண்ட்' என்ற, எண்ணெய் கப்பல், 22.8 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இந்தியாவிற்கு புறப்பட்டது. 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்திற்காக, எண்ணெய் எடுத்துச் சென்ற இந்தக் கப்பல், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தை நோக்கி பயணித்தது.

கடந்த, 3ம் தேதி, இலங்கையின் அம்பாரா மாவட்ட கடற்கரைக்கு அருகே வந்தபோது, கப்பலின், 'இன்ஜின்' அறையில் இருந்த கொதிகலன், வெடித்து சிதறியது; இதையடுத்து, கப்பலில் தீப்பற்றியது.தீயை அணைக்கும் பணியில், இலங்கை கடற்படையினருடன், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரும் இணைந்து ஈடுபட்டனர். கப்பலில் இருந்து, 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒரு மாலுமி தீயில் சிக்கி உயிரிழந்தார். இரண்டு நாட்களாக கப்பலில் எரிந்து வந்த தீ, நேற்று முன்தினம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், இலங்கை கடற்படை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கப்பலில், மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்கும் வகையில், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், தீ முழுவதும் அணைக்கப்படவில்லை. தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங்கை கடற்கரையில் இருந்து, 75 கி.மீ., துாரத்தில், இந்த கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தீப்பிடித்துள்ள இந்த கப்பலை பாதுகாக்க, சிறப்பு நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச நிறுவனம் ஒன்றை, கப்பலின் உரிமையாளர்கள் நியமித்துள்ளனர்.அந்நிறுவன நிபுணர்களின் மேற்பார்வையில், கப்பலை மீட்கும் பணிகள் நடைபெறும். இதைத்தவிர, கூடுதலாக பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த, 10 நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.கப்பலை பாதுகாப்பாக மீட்க, அவர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்படும். இதுவரை, கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை.இந்த மீட்புப் பணியில், இரண்டு பெரிய இழுவைப் கப்பல்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. அந்த கப்பல்கள், சிங்கப்பூர் மற்றும் மொரீஷியசில் இருந்து புறப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X