சென்னை: அரசியலில் நுழைய, இதோ, அதோ என சொல்லிக் கொண்டே வந்த ரஜினி, விரைவில் கட்சி துவங்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கான ஆயத்த வேலைகள், ஏறக்குறைய முடிந்துவிட்டதாம். இதற்காக, பல சீனியர் பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், ரஜினி சமீபத்தில் சந்தித்துள்ளார்.கட்சி துவங்குவது குறித்து அவர்களின் கருத்தைக் கேட்டதோடு, கட்சி துவங்கினால் மக்கள் மனநிலை எப்படியிருக்கும் என்றெல்லாம் கேட்டு உள்ளார் ரஜினி. ஏற்கனவே கட்சி துவங்கி இருக்க வேண்டும், கொரோனா பரவலால் தள்ளிப் போய்விட்டது எனவும் அவர்களிடம் சொன்னாராம்.

தமிழக கட்சிகளின் பெயர்களில் திராவிடம் என்கிற வார்த்தை நிச்சயம் இருக்கும். ஆனால் ரஜினி கட்சியின் பெயரில் இது இருக்காது, ஆன்மிக பெயராக இருக்கும் என, சொல்லப்படுகிறது. ரஜினி என்ன செய்யப் போகிறார், இவருடைய கட்சியால் யாருக்கு லாபம், தங்கள் வாக்கு வங்கியில் ரஜினி கை வைப்பாரா என, டில்லியில் பா.ஜ.,வும் காங்கிரசும் அலசிக் கொண்டிருக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE