சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்களிடம் ஆபாச பேச்சு மத போதகர் கைது

Added : செப் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோத்தகிரி : கோத்தகிரியில், பெண்களிடம் ஆபாசமாக பேசிய, மத போதகர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரவேனு முடியகம்பை பகுதியில் உள்ள, 'பெதஸ்தா' சபையில், அசோக் ஸ்டீபன், 58, என்பவர், மத போதகராக உள்ளார்.இவர், சபைக்கு, ஜெபிக்க வரும் பெண்களிடம், ஆபாச வார்த்தைகள் பேசி, கையை பிடித்து இழுத்து மானபங்கபடுத்தியதாக, மூன்று பெண்கள், கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தனர்.

கோத்தகிரி : கோத்தகிரியில், பெண்களிடம் ஆபாசமாக பேசிய, மத போதகர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரவேனு முடியகம்பை பகுதியில் உள்ள, 'பெதஸ்தா' சபையில், அசோக் ஸ்டீபன், 58, என்பவர், மத போதகராக உள்ளார்.இவர், சபைக்கு, ஜெபிக்க வரும் பெண்களிடம், ஆபாச வார்த்தைகள் பேசி, கையை பிடித்து இழுத்து மானபங்கபடுத்தியதாக, மூன்று பெண்கள், கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்தனர். மேலும், அசோக் ஸ்டீபன், ஆபாசமாக பேசிய, 'ஆடியோ' பதிவு, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.கோத்தகிரி போலீசார் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அசோக் ஸ்டீபன், அங்கிருந்த கார் கண்ணாடியை உடைத்து, அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து, மிரட்டல் விடுத்தது, தெரிய வந்தது.இதையடுத்து போலீசார், மத போதகர் அசோக் ஸ்டீபனை கைது செய்து, குன்னுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
07-செப்-202012:44:07 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இப்படி நிறைய நடக்கிறது . வெளியில் வருவதில்லை அவ்வளவுதான் . இவனுகளை போக்ஸோ சட்டத்தில் உள்ள தள்ளி முட்டியை தட்டினால் மற்றவர் திருந்துவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X