பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் துவங்க சிறந்த மாநிலம்; 10 இடங்களுக்குள் தமிழகம் வராதது ஏன்?

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: தொழில் துவங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வராததற்கு குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அனுமதி வழங்காததே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொழில் துவங்க மிகவும் சாதகமான மாநிலங்கள் பட்டியலை 2015 முதல் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு அம்சங்களின் கீழ் மாநிலங்கள்
Ease of Doing Business, EoDB ranking, Tamil Nadu, TN, தமிழகம், தமிழ்நாடு

சென்னை: தொழில் துவங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வராததற்கு குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அனுமதி வழங்காததே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில் துவங்க மிகவும் சாதகமான மாநிலங்கள் பட்டியலை 2015 முதல் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை சார்பில் பல்வேறு அம்சங்களின் கீழ் மாநிலங்கள் பட்டியலிடப்படுகின்றன.

இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆந்திர மாநிலத்திற்கு முதல் இடம் கிடைத்தது. தமிழகத்திற்கு 14வது இடம் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தொழில் துவங்க அனுமதி வழங்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


latest tamil news


இதுகுறித்து தொழில் துறையினர் கூறியதாவது:தமிழகத்தில் முதலீடுகள் அதிகரித்தாலும் தொழில் துவங்குவதற்கு சாதகமான மாநிலங்கள் பட்டியலில் 14வது இடம் கிடைத்துள்ளது. இதற்கு வணிகம் எளிதாக்குதல் சட்டத்தின் கீழ் ஒற்றைச்சாளர முறையில் 30 நாட்களில் தொழில் துவங்க அனுமதி வழங்கப்படாததே காரணம்.

அதிகாரிகளை சந்திக்காமல் ஆன்லைன் வழியாக அனுமதி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால் தற்போது சுற்றுச்சூழல் துறை கட்டுமான அனுமதி மின்சார வினியோகம் என முக்கியமான துறைகளில் அனுமதி வழங்க தாமதிக்கின்றனர். அவர்களை நேரடியாக சந்தித்தாலே அனுமதி வழங்கப்படும் என்ற நிலை இருக்கிறது. தற்போது கூட பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

எனவே அதிகாரிகள் தலையீடு இன்றி விரைந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தாலே முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதிகாரிகள் தலையீடு இன்றி விரைந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்தாலே முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
08-செப்-202015:07:06 IST Report Abuse
S.P. Barucha எல்லாமே நேர்மையாக இருப்பதால்.
Rate this:
Cancel
Chennai B.S - Chennai,இந்தியா
08-செப்-202009:02:06 IST Report Abuse
Chennai B.S பி ஜே பி கு ஒட்டு போட்டால் கடைசி முதல் இடத்துக்கு வரலாம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
08-செப்-202006:05:32 IST Report Abuse
 Muruga Vel தொழில் அதிபர்கள் ஆனவுடன் நடிகையை கலியாணம் பண்ணிக்கிறதும் ஒரு காரணமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X