உலகிலேயே இந்திய பெண்கள் தான் கவர்ச்சியற்றவர்கள் - அமெரிக்க முன்னாள் அதிபர் பேச்சு!

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் உரையாடல்கள் அடங்கிய ரகசிய டேப்பை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்திய பெண்களை அவர் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.இந்த உரையாடல் பற்றி வரலாற்றாசிரியர் கேரி ஜெ. பாஸ் என்பவர் நியூயார்க் டைம்ஸ் இதழில் கட்டுரை எழுதியுள்ளார். இவர் வங்கதேசம் உருவாக காரணமான, 1971 இந்தியா - பாகிஸ்தான் போர்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் உரையாடல்கள் அடங்கிய ரகசிய டேப்பை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்திய பெண்களை அவர் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.latest tamil newsஇந்த உரையாடல் பற்றி வரலாற்றாசிரியர் கேரி ஜெ. பாஸ் என்பவர் நியூயார்க் டைம்ஸ் இதழில் கட்டுரை எழுதியுள்ளார். இவர் வங்கதேசம் உருவாக காரணமான, 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றியும், அதில் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் இனவெறுப்புடன் நடந்து கொண்டதையும் விவரித்தவர்.
நிக்சன் அமெரிக்காவின் 37-வது அதிபராக 1969 முதல் 1974 வரை பொறுப்பு வகித்தவர். சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ரகசிய உரையாடல்கள் அடங்கிய டேப், முன்னாள் அதிபர் நிக்சனின் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஆப்பிரிக்க கறுப்பினத்தவர்களுடன் இந்தியர்களை ஒப்பிட்டு, அவர்களிடமாவது சிறிதளவு வசீகரம் இருக்கிறது. இந்தியர்கள் பரிதாபகரமானவர்கள் என கூறியுள்ளதாக பாஸ் தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் இந்தியா சோவியத் யூனியனுடன் நெருக்கமாக இருந்தது. பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரம் அமெரிக்காவை ஆதரித்து வந்தது. அதனால் இந்தியர்களுக்கு எதிராக நிக்சன் இருந்ததாக பாஸ் கூறியுள்ளார். அதனால் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட வன்முறையை அவர் கண்டுகொள்ளவில்லை. ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான வங்காள மக்கள் கொல்லப்பட்டதை நிக்ஸன் ஆதரித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


இந்திய பெண்கள் பற்றி ஆபாச கருத்துக்களையும் அந்த உரையாடலில் நிக்சன் கூறியுள்ளார். உலகிலேயே இந்திய பெண்கள்தான் கவர்ச்சி குறைவானவர்கள். பாலுணர்வு அற்றவர்கள். அவர்கள் எப்படி பிள்ளை பெறுகிறார்கள் என பேசியுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த ரகசிய ஆடியோ டேப் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandran - tirunelveli,இந்தியா
13-செப்-202009:55:30 IST Report Abuse
chandran .......
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-செப்-202021:48:14 IST Report Abuse
Vijay D Ratnam சொம்மா குறை சொல்லணும்னு சொல்லாதீங்க பாஸ். அப்டி என்ன சொல்லிட்டாரு, இந்திய பெண்கள் கவர்ச்சியற்றவர்கள் என்று சொல்லிட்டாரு. அவ்ளோதான். அதுல பொய் ஒண்ணுமில்லையே. கோணலா இருந்தாலும் நம்மோடதுனு நமக்கு பழகி பூடிச்சி சார். அந்த எலிகென்ட் லுக்குனு சொல்வாங்களே அது நம்மாளுங்களுக்கு கிடையவே கிடையாது. அந்தக்காலத்து Ursula Andress, Marlyn Manroe, Elisabeth Tailor தொடங்கி Sharon Stone, Julia Roberts, Kate Winslet, Jenifer Lopez, Nicole Kidman, Kate,Winslet, Scarlett Johansson, ஆகட்டும். இப்போது உலகை கலக்கி கொண்டிருக்கும் Marion Cotillard ஆகட்டும் அந்தமாத்திரி என்று பழக்கப்பட்ட அமெரிக்கனுக்கு நம்ம சாவித்ரி, பண்டரிபாய், பானுமதி, செளகார் ஜானகி தொடங்கி குஷ்பூ, அம்பிகா, ராதா, நமீதா, நயன்தாரா ல்லாம் எப்படி கவர்ச்சியா தோணும். உலக லெவல்ல Cindy Crawford, மாதிரியானவர்களால் எத்தனை பேர் கைரேகை தேஞ்சி பூடிச்சி தெரியுமா?
Rate this:
mukundan - chennai,இந்தியா
11-செப்-202013:03:24 IST Report Abuse
mukundanபாஸ், உங்க வக்கிரத்தை எதுக்கு இங்க வந்து கொட்டுறீங்க. போய் ஓரமா உங்க கைரேகையை அழிச்சுக்க வேண்டியது தானே.......
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
10-செப்-202010:56:28 IST Report Abuse
Appan இந்திராகாந்தி இவனுக்கு தக்க படம் புகட்டினார் ..பாகிஸ்தான் மேல் போர் தொடுத்தால் இந்திய மீது அமெரிக்க போர் தொடுக்கும் என்று மிரட்டினான்..அமெரிக்க சரித்திரத்தில் இவனுக்குத்தான் கேட்ட பெயர்..அதோடு இந்திரா மீட்டிங்கில் பாதியிலே வெளியேறி விட்டு அப்பவே டோஸ் கொடுத்தார்..இந்த பேச்சில இந்திராவின் மேல் இருந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறார்..இதை இந்தியர்கள் எதிர்க்கணும்....அதை விட்டு புதிதாக முலைத்து டெல்லியில் ஆட்சிக்கு வந்தவர்கள் இந்திராவுக்கு நேர்ந்த அவமானத்தை பற்றி சந்தோஷப்படுவார்கள் எப்படி இந்தியர்களாக இருப்பார்கள்..இப்போ இந்தியாவில் நடப்பது துவேஷ அரசியல்.இது நிறைய நாள் நீடிக்காது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X