சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: கலக்கத்தில் சரத் பவார்

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: ஹிந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு, இப்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இன்னொரு பக்கம், நடிகரின் பணம் எங்கே போனது என, அமலாக்கத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், இந்த வழக்கில், போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் விசாரணையில் இறங்கியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் சில காலம் நெருக்கமாக இருந்த நடிகை ரியா

புதுடில்லி: ஹிந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு, இப்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இன்னொரு பக்கம், நடிகரின் பணம் எங்கே போனது என, அமலாக்கத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.



latest tamil news



இந்நிலையில், இந்த வழக்கில், போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் விசாரணையில் இறங்கியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் சில காலம் நெருக்கமாக இருந்த நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர், போதைப் பொருள் தடுப்பு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது, மஹாராஷ்டிர அரசியலில் பீதியைக் கிளப்பியுள்ளது.

இதுவரை முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவிற்கு, சுஷாந்த் இறப்பில் சம்பந்தம் உள்ளது என, செய்தி அடிபட்டது. இப்போது விசாரணை வேறு விதமாக செல்கிறது. நடிகர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர், அதனால், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.


latest tamil news



இந்த வழக்கில், துவக்கத்தில், ரியா சக்கரவர்த்திக்கு ஆதரவாக பேசி வந்தார் சரத் பவார். ஆனால் இப்போது போதைப் பொருள் விஷயம் வந்துவிட, கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பு வருமோ என, அவர் பயப்படுகிறாராம்.போதைப் பொருள் விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகள் சிக்குவார்கள்; சினிமாவும் போதையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என, தனக்கு நெருக்கமானவர்களிடம், தன் ஆதங்கத்தைச் சொல்லியிருக்கிறார் பவார்.கர்நாடகாவிலும், ஒரு நடிகை, போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள நிலையில், இந்த விசாரணை, தமிழக சினிமா உலகத்தையும் விட்டுவைக்காது என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
13-செப்-202019:34:13 IST Report Abuse
 Muruga Vel கலியாணம் பண்ணாம அங்கிதா ரியா சாரா என்று பல நடிகைகளுடன் குடும்பம் நடத்திய ஒரு நடிகனுக்கு அளவுக்கு மீறி விளம்பரம்
Rate this:
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
08-செப்-202015:41:53 IST Report Abuse
Shekar Raghavan பணம், போலீஸ், அரசியல்வாதி அனுசரணை = மது ,மாது, போதை பொருள், என்னவென செய்யலாம் ஆஹா ஆஹா
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
08-செப்-202013:34:24 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam விசாரணையில் ஆன்மீகம் பேசும் நடிகர்களும் சிக்குவார்களா? ஏனெனில், பீடாவில் கலந்து போதைப் பொருள் சாப்பிட்டவர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X