பொது செய்தி

இந்தியா

இன்று தேசிய கல்வி கொள்கை மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த, கவர்னர்களின் மாநாடு, இன்று(செப்.,7) நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர், நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கின்றனர்.சீர்திருத்தம்நாட்டில், 1986ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, இதுவரை அமலில் இருந்தது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், புதிய கல்விக் கொள்கை
NEP, NEP 2020, PM Modi

புதுடில்லி : புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த, கவர்னர்களின் மாநாடு, இன்று(செப்.,7) நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர், நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கின்றனர்.


சீர்திருத்தம்


நாட்டில், 1986ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, இதுவரை அமலில் இருந்தது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 'பள்ளி மற்றும் உயர் கல்வியில், பல்வேறு சீர்திருத்தங்களுடன் உருவாகியுள்ள, புதிய தேசிய கல்விக் கொள்கை, துடிப்பான, சமமான மற்றும் அறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க பாடுபடும் என்பதுடன், நம் நாட்டினை, உலகளாவிய வல்லரசாக மாற்றும் முயற்சியில், நேரடியாக பங்கேற்கும்' என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

'உயர் கல்வியை மாற்றுவதில், தேசிய கல்விக் கொள்கை - 2020ன் பங்கு' என்ற தலைப்பில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கவர்னர்கள் மாநாட்டினை, மத்திய கல்வி அமைச்சகம், இன்று நடத்துகிறது.


latest tamil news




'வீடியோ கான்பரன்ஸ்'


இதில், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும், இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கின்றனர் என, பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
somasundaram - TIRUVALLUR,இந்தியா
07-செப்-202013:53:40 IST Report Abuse
somasundaram கல்வியில் மாற்றம் அவசியம் என்பது உண்மை. நமது பிரதமரின் கல்விப்பார்வை தொலைநோக்குடையதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
07-செப்-202009:37:27 IST Report Abuse
bigu தேசிய கல்வியை பற்றி இந்த கவர்னருக்கு என்ன தெரியும் .ok தான் சொல்லுவார்
Rate this:
Cancel
Hari Baskar - Mumbai,இந்தியா
07-செப்-202009:26:35 IST Report Abuse
Hari Baskar நேஷனல் எடுகேஷன் பாலிசி 2020, மிகவும் அருமையான பாலிசி. மும்மொழி கொள்கை கண்டிப்பாக தமிழகத்தில் அமல் படுத்திட வேண்டும். இதை வைத்து அரசியல் செய்வோரை சிறையில் அடைக்க வேண்டும், ஜெய்ஹிந்த் ஜெய் பாரத்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X