ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 'டார்ச்சரால்' ஆட்டோ டிரைவராக மாறிய அரசு டாக்டர்

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (37)
Advertisement
பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொந்தரவால், அரசு டாக்டர் ஒருவர் ஆட்டோ டிரைவராக மாறிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் ரவீந்திரநாத், இம்மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றுமாறு சுகாதாரத்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதனை ஏற்காத டாக்டர் அவர்களுடன்
 
Harassed ,,the IAS officer's Misrule, Doc Turns Auto Driver

பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொந்தரவால், அரசு டாக்டர் ஒருவர் ஆட்டோ டிரைவராக மாறிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் ரவீந்திரநாத், இம்மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றுமாறு சுகாதாரத்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதனை ஏற்காத டாக்டர் அவர்களுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இவர் மீது துறைரீதியான விசாரணை நடந்து கடந்த ஜூன் மாதம் கட்டாய விடுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்ததும் தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் சுகாதாரத் துறை, மருத்துவத் துறையில் உள்ள 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தன்னை வேண்டுமென்றே மீண்டும் கொரோனா வார்டில் பணியமர்த்தியதை அறிந்து பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்த ஊரான பாட கிராமத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். தனது ஆட்டோவின் முன், பின் பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில், ‛ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தால் தான் தொல்லைக்கு ஆளானேன்' என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.
தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, ரவீந்திரநாத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நேரில் வந்து சந்தித்து பிரச்சினைகளை தெரிவியுங்கள். மீண்டும் நீங்கள் பணிக்கு திரும்புமாறு பேசியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
08-செப்-202015:49:25 IST Report Abuse
Palanisamy Sekar அவமானம் பெருத்த அவமானம் ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு. படிப்பு என்பது பலருக்கும் பழிவாங்க கொடுக்கும் சந்தர்ப்பம் என்று கருதிவருகின்றார்கள். அதன் தாக்கம்தான் இந்த செய்தி.
Rate this:
13-செப்-202018:44:02 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கொரோன வார்டில் பணி செய்ய மறுத்த இவர் அப்பாவியா ? இதே பெயர் கொண்ட ஒரு மருத்துவர் தமிழகத்தில் நெக்ஸால் வேலை செய்வது தெரியுமா ?...
Rate this:
Cancel
MATHIBALA - THENI,இந்தியா
08-செப்-202015:08:13 IST Report Abuse
MATHIBALA இந்த டாக்டர் கொரோனா தோற்று இருக்கும் இக்கட்டான சமயத்தில் கொரோன வார்டில் பனி செய்ய மாட்டேன் என்று சொன்னது சரியல்ல. எத்தனையோ மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வர முடியாது என்று சொன்னால் நாடு என்ன ஆவது
Rate this:
அப்பாவி - coimbatore,இந்தியா
08-செப்-202021:02:08 IST Report Abuse
அப்பாவிHe appeared to be scared but has all the right to choose....
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
08-செப்-202013:36:49 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam மாநில அரசும் காரணமாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X