பொது செய்தி

இந்தியா

யாரு பெரியண்ணன் போக போகத்தான் தெரியும்

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தயாராக உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டாலும், 60 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தற்போதைக்கு, அ.தி.மு.க.,வோடு கூட்டணி தொடர்கிறது. போகப் போகத்தான் கூட்டணியில் எத்தனை, 'சீட்' கேட்டு பெறுவோம் என தெரியும்.'யாரு பெரியண்ணன்னு போகப் போகத் தான் தெரிய வரும்...' என, நெத்தியடியாக சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ.,
யாரு பெரியண்ணன் போக போகத்தான் தெரியும்

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தயாராக உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்டாலும், 60 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளது. தற்போதைக்கு, அ.தி.மு.க.,வோடு கூட்டணி தொடர்கிறது. போகப் போகத்தான் கூட்டணியில் எத்தனை, 'சீட்' கேட்டு பெறுவோம் என தெரியும்.


'யாரு பெரியண்ணன்னு போகப் போகத் தான் தெரிய வரும்...' என, நெத்தியடியாக சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொதுச் செயலர் ராகவன் பேட்டி.



ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றுள்ள, 80 ஆயிரம் பேரின் தேர்ச்சி சான்றிதழ், டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த தேர்வின் சான்று, ஏழு ஆண்டுகளுக்குத் தான் செல்லும் என்ற அரசின் முடிவு, பெரிய குழியை வெட்டி, அதில் குப்புறத்தள்ளி மண் போட்டு மூடியதற்கு சமம். எனவே, இந்த முடிவை தமிழக அரசு பரிசீலித்து, திரும்பப் பெற வேண்டும்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் சண்முகநாதன் பேட்டி.



வ.உ.சி., தனித்துவமானவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை யும் எதிர்த்தார்; பிராமணிய ஆதிபத்தியத்தையும் எதிர்த்தார். ஈ.வெ.ரா.,வுக்கு அவர் எழுதிய கடிதங்களே அதற்கு ஆதாரங்கள். இதனால், காங்கிரஸ் தலைவர்கள் பலர், வ.உ.சி., மீது கோபம் கொண்டிருந்தனர் என, ம.பொ.சி., எழுதியுள்ளார்.


'அவர் சொன்னார், இவர் சொன்னார் என, பழைய குப்பையை கிளறி, சமுதாயத்தில் பிரச்னையை உருவாக்கும் உங்களைப் போன்றோர் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என, வலியுறுத்தத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை.



புதிய கல்விக் கொள்கை குறித்து, தான் படித்து அறியாமல், அறைகுறையாக படித்தவர்கள் சொல் கேட்டு, எல்லாம் புரிந்தது போல பேசும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செயல் மிகப் பெரிய தவறு. அவர் தன் ஆலோசகர்களை மாற்றிக் கொள்வது நல்லது.


latest tamil news





'அட்மின்கள் போல, ஆலோசகர்கள் அரைகுறை அறிவுடன் இருப்பதால் தான், இந்தப் பிரச்னை. தகுதிவாய்ந்த ஆலோசகர்களை, திறமையான தலைவர்கள் மட்டுமே வைத்துக் கொள்வர்; மற்றவர்கள் எல்லாம், பரபரப்பு ஏற்படுத்துபவர்களைத் தான் ஆலோசகர்களாக வைத்துள்ளனர் போலும்...' என, விரக்தியை வௌிப்படுத்தும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.



தமிழகத்தில், 42 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். 'கிஸான் சம்மான்' நிதி திட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின், போலியானவர்களை சிறு, குறு விவசாயிகள் என தெரிவித்து, பல லட்சம் பேருக்கு, பல நுாறு கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்த முறைகேடுக்கு அதிகாரிகள் பெரிதும் துணை புரிந்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'உண்மை தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி பேட்டி.



கரும்பு சக்கையிலிருந்து எடுக்கப்படும், மொலாசஸ், 1 டன், 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கிறது. கரும்பு உப பொருட்கள் விலை உயர்ந்து உள்ளது. ஆலைகள் லாபத்தில் உள்ளன. வட்டியில்லா கடன், ஏற்றுமதி சர்க்கரைக்கு மானியம் என ஆலைகளுக்கு மத்திய அரசு சலுகைகளை வழங்கியுள்ளது. ஆனால், கரும்புக்கு, ஆதார விலை மட்டும் உயர்த்தப்படவில்லை.


'கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை இனிப்பாக இல்லை; ஆனால், உப பொருட்கள் துறை, இனிக்கிறது என்கிறீர்கள்; மாற வேண்டும் இந்த நிலைமை...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் தற்போதைக்கு, அ.தி.மு.க.,வோடு கூட்டணி தொடர்கிறது. (இதை போடாம உட்றாதீங்க) போகப் போகத்தான் கூட்டணியில் அதிமுக எத்தனை, 'சீட்' கேட்டு பெறும் என தெரியும். (சிறு திருத்தம் ஹி ஹி) இப்படி சொல்லலாம
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
07-செப்-202019:34:17 IST Report Abuse
Anbu Tamilan DMK & Cong & alliance should not come to power.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-செப்-202018:59:27 IST Report Abuse
கல்யாணராமன் சு. பேராசிரியர் என்று அழைக்கப்படும் அருணன் எந்தக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தார் அல்லது புரிகிறார் என்பது தெரிந்துகொள்ள ஆவலுடன் இருக்கிறேன் ...........
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
08-செப்-202009:15:07 IST Report Abuse
Sathya Dhara பித்தலாட்டாக்காரர்கள் அனைவரும் சாதாரணமாக தாங்களாகவே சமூகத்தை ஏமாற்ற போட்டுக்கொள்ளும் பொய் இது. கருத்தை பார்த்தாலே...யோக்கியதை புரிய வில்லையா......பேராசிரியன் பெரியான் என்ற பெயர்களில் எல்லாம் தமிழகத்தை சிதைத்த ஆட்களை நாம் நிறையவே கண்டுள்ளோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X