பொது செய்தி

இந்தியா

நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ. அமைப்புகளின் உரிமம் ரத்து

Updated : செப் 07, 2020 | Added : செப் 07, 2020 | கருத்துகள் (76)
Share
Advertisement
ChristianGroups, Government, Suspends, FCRA, Clearance, கிறிஸ்துவ, என்ஜிஓ, உரிமம், ரத்து

புதுடில்லி: வெளிநாட்டு நிதிப்பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நான்கு கிறிஸ்துவ என்.ஜி.ஓ., அமைப்புகளின் உரிமம் ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கு எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவது அவசியமாகும். இந்நிலையில், இந்த ஆண்டு 6 என்.ஜி.ஓ.,க்கள் அமைப்பின் வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டதில் 4 கிறிஸ்துவ அமைப்புகளும் அடங்கும். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த செவந்த் டே அத்வந்து மற்றும் பேப்டிஸ்ட் சர்ச் உள்ளிட்ட நன்கொடையளிக்கும் 2 கிறிஸ்துவ அமைப்புகளும் மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



ஜார்கண்டில் உள்ள எக்ரியோசொக்யூலிஸ் நார்த் வெஸ்டர்ன் காஸ்னர் இவாஞ் செலிக்கல், லூதரன் சர்ச், மணிப்பூரில் உள்ள சர்ச் கூட்டமைப்பு மற்றும் மும்பையில் உள்ள நியூ லைப் பெலோஷிப் அசோசியேஷன் ஆகியவற்றின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரத்து செய்ததற்கான காரணமும், என்ன மீறல் என்பதும் குறிப்பிடப்படவில்லை.


latest tamil news



மும்பையில் கடந்தாண்டு ஏப்ரலிலும், செப்டம்பரிலும் நியூலைப் பெலோஷிப் அசோசியேஷனில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தை, மதமாற்றம் செய்வதாக கூறி பஜ்ரங் தள் அமைப்பு இடையூறு செய்து தடுத்தது. இந்நிலையில், 1964 முதல் செயல்பட்டு வந்த நியூ லைப் அமைப்பின் வெளிநாட்டு நிதிபெறும் உரிமம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்போது வரை வெளிநாட்டு நன்கொடை பெறும் சட்டத்தின் கீழ் 22,457 என்.ஜி.ஓ. அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20,674 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
13-செப்-202007:57:01 IST Report Abuse
thulakol மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
10-செப்-202010:56:20 IST Report Abuse
ganapati sb செழுமையான நதிக்கரை நாகரிகம் கொண்ட மண்ணின் மைந்தர்களை நம்மை சுரண்டி ஆக்கிரமித்த அந்நியன் கலாச்சாரத்திற்கு மாற்றம் செய்வது அநாகரீகமானது வன்முறைக்கு வித்தாகும் இந்த பாலைவன பழக்கத்தை ஆங்கிலேய அரபு அடிமைகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் .
Rate this:
Cancel
Natrayan M - Dindigul,இந்தியா
08-செப்-202015:51:31 IST Report Abuse
Natrayan M ஊர் ஊருக்கு சர்ச்சை கட்டிக்கொண்டு மக்களை துங்க விடாமலும் மாணவர்களை படிக்க விடாமலும் செய்கிறார்கள். இதனை அரசு தடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X