கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

Added : ஜூன் 20, 2011 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழி மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு பெஞ்சில் இன்று நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்கு பிரதிபலனாக, தன் துணை நிறுவனமான சினியுக் மூலம், 214 கோடி ரூபாயை, கலைஞர் "டிவி'க்கு கொடுத்தது. இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., கலைஞர் "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஒரு மாதம் காலமாக திகார் சிறையில் உள்ளனர். ஜாமின் கோரி இருவரும், பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களது கடைசி நம்பிக்கையே இந்த ஜாமின் மனுதான்.


இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சி.பி.ஐ., சார்பில் கடந்த 17ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்ட 214 கோடி ரூபாய், லஞ்ச பணம் தான். இது கடனாக பெறப்பட்டது அல்ல. கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்களாக செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. "2ஜி' ஊழல் வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை கலைத்து விடுவர்; ஆதாரங்களை அழித்து விடுவர்' என்று குறிப்பிட்டு இருந்தது.


இந்நிலையில், கனிமொழி, சரத்குமார் ஜாமின் மனுவை விசாரிக்க இருந்த சுப்ரீம் கோர்ட் பெஞ்சின் நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கும்படி, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவிடம் கேட்டுக் கொண்டனர். விலகலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதன் காரணமாக, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச், கனிமொழி ஜாமின் மனுவை இன்று விசாரிக்க உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணையை ஆரம்பம் முதல், நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் கண்காணித்து வருகிறது. எனவே அவர் அடங்கிய சிறப்பு பெஞ்ச், கனிமொழியின் ஜாமின் மனுவை விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saranya - Dubai,இந்தியா
20-ஜூன்-201110:48:30 IST Report Abuse
saranya ஜாமீன் கிடைக்கும் ஆனா கிடைக்காது ...........................
Rate this:
Cancel
Sak Raja - wembley,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201108:54:21 IST Report Abuse
Sak Raja கடல்ல மீன் புடிக்க தடை நீங்கிடுச்சா? ஆனா ஆள் கடல்ல கூட ஜாமீன் இப்பல்லாம் பிடிபடுறதே இல்லையாமே?
Rate this:
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
20-ஜூன்-201106:58:00 IST Report Abuse
ஆரூர் ரங அய்யா சாமி.வேண்டாம்! ஜாமீனை வாங்கிக்கொண்டு இங்கே வந்து சென்னை சங்கமம நடத்த்துறேன் என்பார்! எங்க ஏரியாவுல ஒரே சத்தம் தலைவலி வரும்... வேணும்னா.......... திகார் சங்கமம்னு ஒண்ணு புதுசா ஆரம்பிச்சு நடத்தலாம்! மற்ற கிரிமினல்கலையே ஆடவிடலாம்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X