வசூலுக்கு புது ரூட்டு... எப்.ஐ.ஆர்.,க்கு ரூ.25 ஆயிரம் 'ரேட்டு': 'டைரி'யில் கணக்கெழுதி 'கொடி' ஆபீசர் கொழுத்த வசூல்

Added : செப் 07, 2020 | |
Advertisement
ப்பப்பா, என்ன கூட்டம்'' என்றவாறே வந்த சித்ராவிடம், ''என்னக்கா, புலம்பிட்டே வர்றீங்க?'' கேட்டாள் மித்ரா.''மித்து, பஸ், டூவீலர், மத்த வண்டிகள்னு, ரோடு பூரா ஒரே டிராபிக். பஸ் ஸ்டாப்பில் எங்க பார்த்தாலும், ஜனங்க கும்பலா நிக்கறாங்க...''''அப்ப, மாமூல் வாழ்க்கை ஆரம்பிச்சிடுச்சுனு சொல்லுங்க,''''உண்மைதான்டி. அதேமாதிரி போலீசும், தங்களோட 'மாமூல்' வாழ்க்கைக்கு
 வசூலுக்கு புது ரூட்டு... எப்.ஐ.ஆர்.,க்கு ரூ.25 ஆயிரம் 'ரேட்டு': 'டைரி'யில் கணக்கெழுதி 'கொடி' ஆபீசர் கொழுத்த வசூல்

ப்பப்பா, என்ன கூட்டம்'' என்றவாறே வந்த சித்ராவிடம், ''என்னக்கா, புலம்பிட்டே வர்றீங்க?'' கேட்டாள் மித்ரா.''மித்து, பஸ், டூவீலர், மத்த வண்டிகள்னு, ரோடு பூரா ஒரே டிராபிக். பஸ் ஸ்டாப்பில் எங்க பார்த்தாலும், ஜனங்க கும்பலா நிக்கறாங்க...''''அப்ப, மாமூல் வாழ்க்கை ஆரம்பிச்சிடுச்சுனு சொல்லுங்க,''''உண்மைதான்டி. அதேமாதிரி போலீசும், தங்களோட 'மாமூல்' வாழ்க்கைக்கு திரும்பிட்டாங்க. எல்லா முட்டுச்சந்திலும் நின்னு, வண்டியை புடிச்சு, 'வரி' போடறாங்க. மொத்தத்தில, 'இயல்பு நிலை' திரும்பிச்சுடுன்னு கூட சொல்லலாம்,''''இதுக்கு நடுவில, ஊத்துக்குளி ரோட்ல, 'டூ வீலர்' போறமாதிரி, ரயில்வே சுரங்கபாலம் அமைக்க திட்டம் போட்டாங்க. அதுக்காக, கான்கிரீட் சதுரம் செஞ்சு வச்ச, ரெண்டு வருஷமாச்சு. ஆனா, வேலயே நடக்கல,''''இதுக்காக, எம்.பி.,கிட்ட, 'சவுத்' சொன்னதுக்கு, 'ஒரு லெட்டர் குடுத்துடுங்க, பாத்துக்கலாம்'னு சொன்னாராம்,''''ரயில்வே அபிஷியல்ஸ்-க்கு அழுத்தம் குடுத்து சொன்னா, அவங்க செஞ்சுட்டு போறாங்க. ஏன், எம்.பி., இதக்கூட செய்ய மாட்டாரா?'' மித்ரா கேட்டாள்.''தோழர்கள் எப்போமே, 'ரூல்ஸ்' பேசுவாங்க, ஒனக்கு தெரியாதா?,'' சித்ரா சொன்னதும், ''அக்கா, கிணறு வெட்ட பூதம் கிளம்பின கத தெரியுமா?'' மித்ரா புதிர் போட்டாள்.''அது, என்ன விஷயம்டி?''''அக்கா, ஊத்துக்குளி யூனியன்ல, பெரியபாளையத்தில், 2 'இன்ச்' பைப் பதிச்சு சாய ஆலைக்காரர் ஒருத்தர் தண்ணீர் திருடிட்டார். இந்த மேட்டர் ஊர் முழுக்க பரவியதில், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு, தெரியாமலயா பண்ணியிருப்பாங்க'னு பலரும் பேசறாங்க. 'எல்லாம் இவங்களும் உள்தான்,''னு, சந்தேகம் வந்திடுச்சாம். அதுக்கு அப்புறமா, ரகசியமா பஞ்சாயத்து முழுசும் ஆய்வு நடத்தினாங்க,''''அதில, என்ன தெரிஞ்சது''''22 நிறுவனத்துக்கு, இதேமாதிரி 'லைன்' கொடுத்தது தெரிஞ்சுதாம். தனியா, 'பில்' போட்டு, மாசாமாசம் வசூல் பண்ணி, சம்பாதிச்சுட்டு இருந்திருக்காங்க. அதனால, 'புல்லா' எல்லாத்தையும், 'செக்' பண்ணி பாக்கணும்னு, மக்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.''லஞ்ச பூதம் வெளியே வந்திடுச்சுன்னு சொல்லுடி,'' என்ற சித்ரா, ''கொரோனா மருத்துவ மையம் அமைக்க அனுமதி குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களாம்,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அதில, என்னக்கா பிரச்னை?''''திருப்பூர்ல இருந்து, கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைக்கு போயி 'ட்ரீட்மென்ட்' எடுக்கறதுனா, பல பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கு. அதனால, டாக்டர் ஒண்ணா சேர்ந்து, பெரிய மண்டபத்துல சிகிச்சை மையம் அமைக்கலாம்னு ஏற்பாடு செஞ்சாங்க''''அதிகமா 'பில்' போட்டுடுவாங்கன்னு, மாவட்ட சுகாதார அதிகாரிங்க முட்டுக்கட்டை போட்டுட்டாங்க. அதனால, தொற்றால் பாதிக்கப்பட்டவங்க, கோவை போயிட்டு, பல மணி நேரம் சுத்தியடிச்சுட்டு கஷ்டப்படறாங்க,''''ேஸா, இந்த விஷயத்தில, கலெக்டர் தலையிட்டு ஒரு தீர்வை சொல்லணும்,'' விளக்கினாள் சித்ரா.இருவரும், டீ குடித்து கொண்டே அரட்டையை தொடர்ந்தனர்.''மித்து, 'டாஸ்மாக்' மதுபாட்டில் கம்பெனி ஊழியரிடம், வசூல் வேட்டை நடத்தற அதிகாரி, 'இன்னும் வேணும்'னு கேட்டு வாங்கறாராம். அந்த ஆபீசில் வேல செய்ற ஒருத்தரும், அதிகாரி சொல்றதை கேட்டு, கடை ஊழியர்கிட்ட வசூல் வேட்டை நடத்தறாராம்,''அப்போது அவ்வழியே சென்ற, இருவரை பார்த்த மித்ரா, ''ஹாய், சவுந்திரபாண்டியன், குமரவடிவேல் நல்லா இருக்கீங்களா?'' என்றதும், அவர்களும் பதில் சொல்லி நகர்ந்தனர்.''இவ்ளோ மழை வந்தும், அலகுமலை குளம் நிரம்பலையாம்,'' தொடர்ந்தாள் சித்ரா.''தண்ணீர் போற வழி அடைச்சிருச்சா?''''யெஸ், கரெக்டா சொன்னே. திருட்டுத்தனமா கோவில் நிலம், தனியார் நிலம்னு, மண் எடுத்து வித்தாங்க. அதனால, பாலம் இடிஞ்சு, வழி அடைச்சிட்டதால, குளத்துக்கு தண்ணீர் போகலை. மண் கடத்த அதிகாரிகள் உடந்தையா இருக்கறதால, ஊர் குளத்துக்கு தண்ணீர் வரலை. ஆனா, அதிகாரி பாக்கெட்டில் ஒரே பணமழைதான், மித்து,''''போக்குவரத்து அதிகாரி, தன்னோட 'கொடி'யை 'செல்வாக்காக' பறக்கவிட ஆரம்பிச்சுட்டாரு,'' என்றாள் மித்ரா.''அது என்னடி விஷயம்,''''சமீபத்தில், டிரான்ஸ்பரில் வந்த அதிகாரி, களத்தில இறங்கி, வசூல்வேட்டை ஜோராக நடத்தறார். பெரிய பெரிய கடைகள், பனியன் கம்பெனிக்கு போய் பேசறாரு,''''மறுநாள், டிரைவரை அனுப்பி, வாரம், மாதம் இவ்ளவு தரணும்னு, 'டிமாண்ட்' பண்றாராம். இவரின் அடாவடி வசூலால், கடைக்காரர்கள் மிரண்டு கிடக்கிறாங்களாம். கணக்கு வழக்கில கரெக்டா இருக்கணும்னு, 'டைரி' போட்டு வசூல் செய்றாருங்கோ,'' சத்தம் போட்டு சொன்னாள் மித்ரா.''எனக்கு காது கேட்கும், கொஞ்சம் மெதுவாத்தான் சொல்டி,''''அப்படீன்னா, கிட்ட வாங்கன்னு'' சொன்ன மித்ரா, சித்ராவின் காதருகே சென்று, ''காசியில் வாசி ஊரில், பெரிய அதிகாரி ஒருத்தர், கச்சிதமாக பிளான்போட்டு, வசூல் பண்றார்,''''ஸ்டேஷனுக்கு பெரிய ஆட்கள் புகார் பண்ண போனதை தெரிஞ்சுகிட்ட, தன்னோட மூன்றெழுத்து ஆபீசில் வச்சு பஞ்சாயத்து பண்ணி, பிரச்னையை, 'பாஸ்' பண்ண வைக்கிறார்,''''இதுகூட பரவாயில்லக்கா. போனவாரம் கூட, 'போக்சோ'வில், சிக்கியவருக்கு முன் ஜாமினுக்கு 'அப்ளை' பண்ண, அவரோட சொந்தக்காரங்கிட்ட, 25 ஆயிரம் வாங்கிட்டுத்தான், நகல் குடுத்தாராம். இதேமாதிரி பல விவகாரத்தில, பல லகரம் பார்த்துட்டாராம்,'' மித்ரா சொன்னதும், வானம் மழைத்துளிகளை பிரசவித்தது.உடனே, ''ஓ.கே., மித்து, அப்புறம் பார்க்கலாம்,'' என்வாறே, புறப்பட்டாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X