ஏன் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்

Added : செப் 08, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
பல மொழிகளை கற்று பண்டிதன் ஆனால் மட்டுமே எந்த மொழி சிறந்த மொழி என கருத்து கூற முடியும். மகாகவி பாரதியார் காசியில் வாழ்ந்த போது சமஸ்கிருதம் கற்று கொண்டார். புதுச்சேரி சென்ற போது பிரெஞ்ச் கற்று கொண்டார். சகோதரி நிவேதிதாவை சந்தித்த போது ஆங்கிலப்புலமை பெற்றார். இன்னும் பல மொழிகளை இளவயதிலேயே கற்று தேர்ந்தார். அதனால் தான் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது
 ஏன் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்

பல மொழிகளை கற்று பண்டிதன் ஆனால் மட்டுமே எந்த மொழி சிறந்த மொழி என கருத்து கூற முடியும். மகாகவி பாரதியார் காசியில் வாழ்ந்த போது சமஸ்கிருதம் கற்று கொண்டார். புதுச்சேரி சென்ற போது பிரெஞ்ச் கற்று கொண்டார். சகோதரி நிவேதிதாவை சந்தித்த போது ஆங்கிலப்புலமை பெற்றார். இன்னும் பல மொழிகளை இளவயதிலேயே கற்று தேர்ந்தார்.

அதனால் தான் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'என்றார்.இன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு தாய் மொழியும், ஆங்கிலமும் போதும் என்ற திருப்தியை ஏற்படுத்துவதில் முனைந்து கொண்டிருக்கிறோம். அரசியலுக்காக வேண்டுமானால் அது பேசு பொருளாக இருக்கலாம். இரு மொழிக் கொள்கை பயில்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் மேலும் ஒரு மொழி தெரிந்திருப்பது தன்னுடன் கூடுதலாக ஒரு ஆள் இருப்பதற்கு சமம் என்பதனை மறந்து விடக்கூடாது.
அதிகமாக பேசப்படும் மொழிஇந்தியாவின் பெரிய மாநிலங்களில் நான்கிலும், சிறிய மாநிலங்கள் பலவற்றிலும் பரவலாக பேசக்கூடிய மொழி ஹிந்தி. இந்திய மக்களால் அதிகமாக பேசப்படும் மொழிகளில் ஹிந்தி முதலிடமும், தெலுங்கு 2வது இடமும் வகிக்கின்றன.
1966க்கு முன்பு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் ஹிந்தி வகுப்புகள் நடந்தன. ஹிந்தி பண்டிட் என்ற ஆசிரியர் ஒருவர் உண்டு. ஹிந்தி தேர்வுகள் நடக்கும். ஆனால் தேர்வு பெறுவது அவசியமில்லை. அந்த காலகட்டத்தில் தட்சிணபாரத் ஹிந்தி பிரசார சபையினால் நடத்தப்பட்ட ஹிந்தி தேர்வுகளை பள்ளியில் படிக்கும் போதே தனிப்பட்ட முறையில் மாணவர்கள் எழுதி தேர்ச்சியும் பெற்றார்கள். பின்பு ஏற்பட்ட ஹிந்தி எதிர்ப்பு கருத்தாக்கம் காரணமாக மாணவர்கள் அந்த பலனை இழந்தார்கள்.இருமொழிகளுடன் சேர்த்து மூன்றாவதாக கற்கும் ஒரு இந்திய மொழியின் பயன் அதை கற்றவர்களுக்கு நன்றாக தெரியும். இந்தியாவில் எந்த பகுதிக்கு பணிநிமித்தம் சென்றாலும் சரி, சுற்றுலா சென்றாலும் சரி, ஹிந்தி தெரிந்தவர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்ததில்லை.


ரயில் பயணங்களில்வணிக நிமித்தம் இந்தியாவில் வட பகுதிக்கு செல்லும் வியாபாரிகள் ரயில் பயணம் செய்யும் போது சென்னையை தாண்டினால் ஹிந்தியில் பேசினால் தான் எதுவும் எளிது என்பதை நன்கு உணர்வர். விஜயவாடா சென்று கிழக்கு முகமாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மார்க்கமாக இருந்தாலும், மேற்கு நோக்கி செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் மார்க்கமாக இருந்தாலும், வடக்கு நோக்கி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி., கங்காசோரி எக்ஸ்பிரஸ், கயா எக்ஸ்பிரஸ் மார்க்கமாக இருந்தாலும் ஹிந்தி தெரியா விட்டால் உங்கள் பயணம் இனிமையாக இருக்காது.விமான பயணத்தை எடுத்து கொள்வோம். மதுரை துவங்கி ஸ்ரீநகர் விமான நிலையம் வரை பயணிகள் உடமை சோதனை, பாதுகாப்பு சோதனை வரை எல்லாவற்றிலும் ஹிந்தி தெரிந்த காவலர்களே பணியில் இருக்கிறார்கள். தமிழகம் தாண்டி விட்டால் விமானபயண அறிவிப்பும் ஹிந்தியிலும்,ஆங்கிலத்திலும் உள்ளது. மொழி தெரியாமல் தவிக்கும் பயணிகளாக நம் இளைய தலைமுறையினை நாம் திகைக்க வைக்க வேண்டுமா என யோசிக்க வேண்டும்.


பிற தலைநகரங்களில்தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்திலும், கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலும், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவிலும், டாக்சி டிரைவர்களும், ஆட்டோ டிரைவர்களும் ஹிந்தியில் சரளமாக பேசுகிறார்கள்.ராணுவத்தில் பணிபுரிய செல்லும் தமிழக வீரர்கள் மொழி தெரியாததால் தாங்கள் படும் அவஸ்தைகளை கூற கேட்டிருக்கிறேன். பின்பு படிப்படியாக ஹிந்தி கற்று கொண்டு மற்றவர்களுடன் பேசவும், அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளவும் முற்படுகிறார்கள்.மேற்படிப்புக்காக தமிழகத்திலிருந்து டில்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜி இன்ஸ்டிடியூட் போன்ற கல்வி நிலையங்களுக்கு செல்லும் மருத்துவ மாணவர்கள் ஹிந்தி மொழி தெரியாததால் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மருத்துவமனையில் நோயாளிகள் பேசுவதை முழுவதும் புரிந்து கொள்ள இயலாததாலும், நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவதற்கு முடியாததாலும், வெளியிடங்களுக்கு தனிமையாக செல்ல முடியாததாலும், தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.


எம்.பி., எப்படி பேசுவார்லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் நடக்கும் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்புகளை பார்க்கும் போது, ஒரு விஷயம் நன்கு தெரியும். பெரும்பாலான விவாதங்கள் ஹிந்தியில் நடக்கும் போது மொழி தெரியாதவர்கள் அந்த விவாதங்களில் நேரிடையாகவும், ஆணித்தரமாகவும் பேச முடிவதில்லை. நீங்கள் தேர்ந்து எடுத்து டில்லிக்கு அனுப்பும் எம்.பி., ஆணித்தரமாக பேசா விட்டால் உங்கள் தொகுதிக்கு எவ்வாறு நன்மைகளை பெற்று தர இயலும்.மராத்தி மொழியை தாய் மொழியாக கொண்ட லதா மங்கேஷ்கர் ஹிந்தியில் பாடிய பின்பு தான் பிரபலமானார். தெலுங்கை தாய் மொழியாக கொண்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட கே.ஜே.யேசுதாஸ் தமிழில் வெற்றிக்கொடி நாட்டவில்லையா. பல மொழி கற்றதன் பலன் அதுதான். தமிழகத்தில் பிறந்து ஹிந்தி திரைப்படங்களில் வெற்றி பெற்ற பல நடிகைகளையும், பஞ்சாப்பில் பிறந்து ஹிந்தியில் வெற்றிபெற்ற நடிகர் தர்மேந்திரா வையும் மேற்கொள் காட்ட முடியும்.


தமிழ் அழியாதுபிற மொழிகளை கற்பதினால் தமிழ் என்றைக்கும் அழிந்து விடாது. பிரதமர் மோடி ஒவ்வொரு உரையின் போதும் செம்மொழியாம் தமிழ்ப்பாடல் வரிகளை மேற்கொள் காட்டும் போது அது எனது மொழி என்று பெருமை கொள்கிறேன். செம்மொழி தமிழுடன் ஒப்பிடும் போது ஹிந்தி கற்று கொள்வது மிகவும் எளிது.பாரதியார் 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'என்றார். பிற மொழி கற்காமலும், அதில் புலமை பெறாமலும் தமிழ் மொழிக்கு எவ்வாறு புதிய நுால்களை தர இயலும்.இன்றைய தலைமுறையை நல்வழிப்படுத்த பன்மொழி புலமை தேவை. தமிழை தாய் மொழியாகவும், ஆங்கிலத்தை வாழ்க்கை மொழியாகவும், ஹிந்தியை துணை மொழியாகவும் கொள்வது நன்று. விரும்பும் மொழியை கற்று கொள்வது குடிமகனின் தனிப்பட்ட உரிமை. அதற்கு வாய்ப்பளிக்காமல் கதவுகளை அரசே மூடுவது ஆரோக்கியமானதல்ல.


சிந்தித்து செயலாற்றுங்கள்சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே நம் நாடு முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களுடன் பேச ஹிந்தி அவசியமாகிறது. ஹிந்தி பேசும் ஒருவனுக்கு தமிழகத்தில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால் தமிழ் பேச கற்று கொள்கிறான். நமக்கு மட்டும் தயக்கம் ஏன்.
இளவயதில் பிற மொழி கற்றுக்கொள்ள மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். தனியார் பள்ளிகளில் அவ்வசதி இருக்கும் போது, அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இவ்வசதி இல்லாவிட்டால், ஏழை மற்றும் அடித்தட்டு மாணவ செல்வங்களின் எதிர்காலம் எளிமையாக இருக்காது. எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்.-டாக்டர் பி.எஸ்.சண்முகம்மூத்த எலும்புமுறிவு அறுவைசிகிச்சை நிபுணர்டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் செனட் உறுப்பினர், மதுரை drpssmdu@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-செப்-202018:05:19 IST Report Abuse
Malick Raja பாரதியாரும் பிஜேபியில் சேர்ந்துவிட்டார் .. அல்ல சேர்த்து விட்டார்கள் ..அவர் சொன்னது உண்மையானால் இருமொழிக் கொள்கை தமிழனின் கொள்கை ..மும்மொழிக்கொள்கை இந்திக்காரன் கொள்கை
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
10-செப்-202007:35:49 IST Report Abuse
visu "ஹிந்தி பேசும் ஒருவனுக்கு தமிழகத்தில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால் தமிழ் பேச கற்று கொள்கிறான்." ஆவன் என்ன பள்ளியில் சென்ற கற்று கொள்கிறான் அது போல எனக்கு தேவை படும்போது நான் கற்று கொள்கிறேன் ஐயா அதை ஏன் பள்ளியில் கொண்டு வருகிறீர்கள் இன்று 47% பேசுகிறார்கள் அதை கற்றுகொள் என்பார்கள் நாளை உங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே அதை தேசிய மொழியாகி விடலாமே என்பார்கள்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14-செப்-202005:24:58 IST Report Abuse
meenakshisundaramஅப்ப இனிமே தமிழ் நாட்டிலிலே வண்டி ஒட்டுறவன் 'ஹை .ஹை' ன்னு சொல்லக்கூடாதா? மக்கள் கேட்பது அரசு பள்ளிகளிலும் இந்த வசதி வேண்டும் ஸ்டாலின் பள்ளிகலீல் மட்டும் மேட்டுக்குடியினர் (நன்றி ,முக ) மட்டுமே கற்றுக்கொள்வதைப்போல .என்பது தான்...
Rate this:
Cancel
09-செப்-202017:40:22 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) உயர் பதவியில் இருந்தாலும் ஹிந்தி தெரியாமல் இருக்கும் தமிழ் அதிகாரிகள் அதிகம் இது தான் ஊழல் கழக ஆட்சிகளின் சாதனை.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
10-செப்-202008:39:50 IST Report Abuse
Amal Anandanஉயர் பதவிகளில் இருந்தாலும் ஹிந்தி மட்டுமே பேசுபவர்களால் நாடே பாழாகிறது....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
11-செப்-202017:37:47 IST Report Abuse
madhavan rajanஅவர்களுக்கு ஆங்கிலம் என்பது அந்நிய நாட்டு மொழி பிடிக்காது. பல மாநிலங்களில் பேசப்படும் ஹிந்தி பரவாயில்லை அதனால் கற்கிறார்கள். தமிழர்களை போல அந்நிய மோகம் கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் பேசப்படும் மொழியின் மீது வெறுப்பு காட்டுவதில்லை. மஹாராஷ்ட்ரா, குஜராத், பெங்கால், ஒரிஸ்ஸா போன்ற பல மாநில மொழிகள் இருந்தாலும் அந்தந்த மாநிலத்தார் அந்த மொழிகளுடன் ஹிந்தியை கற்பதில் தயக்கம் காட்டுவதில்லை. ஹிந்தி மத்திய அரசின் அலுவலக மொழி என்று சிதம்பரம் என்ற தமிழர் உள்துறை மந்திரியாக இருந்தபோதும் இருந்தது. சிதம்பரம் ஹிந்தியை ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். அப்போதெல்லாம் இந்த கழகங்கள் பாராளுமன்றத்தில் அதை எதிர்க்கவில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X