பொது செய்தி

இந்தியா

மதிய உணவுடன் பால் வழங்க துணை ஜனாதிபதி பரிந்துரை

Updated : செப் 08, 2020 | Added : செப் 08, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: மதிய உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு பால் சேர்த்து வழங்கவேண்டும் என்ற பரிந்துரையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்வைத்துள்ளார்.நாடு முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், மத்திய உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது. வறுமையின் காரணமாக, பள்ளிக்கு வர இயலாமல், சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் சிறுவர் - சிறுமியரை பள்ளிக்கு
vice president, vengaiya naidu, recommend, milk, meals, துணைஜனாதிபதி, வெங்கையா நாயுடு, மதிய உணவு, பால், பரிந்துரை

புதுடில்லி: மதிய உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு பால் சேர்த்து வழங்கவேண்டும் என்ற பரிந்துரையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்வைத்துள்ளார்.

நாடு முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், மத்திய உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது. வறுமையின் காரணமாக, பள்ளிக்கு வர இயலாமல், சிறு வயதிலேயே வேலைக்கு செல்லும் சிறுவர் - சிறுமியரை பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்கத்திலும், இந்த திட்டம், தமிழகத்தில் தான் முதன் முறையாக துவங்கப்பட்டது. இதையடுத்து, இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், இதர மாநிலங்களிலும், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பேசினார். அப்போது குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவுகளை மேம்படுத்தும் வகையில், காலை உணவு அல்லது மதிய உணவுடன் சேர்த்து பால் வழங்க வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மதிய உணவு திட்டத்தில், பால் சேர்த்து வழங்க, அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கும் என, துணை ஜனாதிபதிக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதிஅளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-செப்-202017:04:53 IST Report Abuse
Endrum Indian பரிந்துரை சரிதான் ஆனால் அதில் கூட ஊழல் செய்து பணம் திரட்டுமே இந்த அரசு அது தான் உதைக்கின்றது. இல்லையென்றால் அவர்களுக்கு பால் (அந்த காலத்தில் நான் 5 வது படிக்கும் போது அறிமுகமானது) கூட பலம் பாதாம் பருப்பு கூட கொடுக்கலாம் அரசு ஊழல் செய்யாது என்றால்.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
08-செப்-202015:13:39 IST Report Abuse
Gnanam குழந்தைகளின் நலம் பற்றிய தங்களுடைய நல்லெண்ணத்திற்கு பாராட்டுக்கள். ஆனாலும், மிருகங்களின் பால் குழந்தைகளுக்கு நல்லதுதானா என்று ஆராய்ந்தறியவேண்டும். மிருகக்கொழுப்பு குழந்தைகளுக்கு தேவைதானா? பதிலாக நமது பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை முறையாக செய்துகொடுத்தால் அதுவே மிகவும் நல்லதாக இருக்கும். மேலும், பாலில் கலப்படம் செய்வது மிகவும் எளிது . ஆகவே ஊட்டச்சத்து உணவை நல்லமுறையில் செய்துகொடுப்பது நல்லது .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
08-செப்-202013:38:13 IST Report Abuse
Visu Iyer எதெல்லாம் நல்லது இல்லையோ அதெல்லாம் சொல்லுவாங்க.. (போல) சோறுசாப்பிட்டும் போது பால் சாப்பிட கூடாது என்ற அடிப்படை கூட இல்லாதவர்கள் இது போல சொல்லுவார்கள்.. இதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X