அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: டிவி நிகழ்ச்சிக்கு வந்த சோதனை

Updated : செப் 08, 2020 | Added : செப் 08, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
சென்னை: தனியார் டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றிற்கு மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, அந்த நிகழ்ச்சி அந்த டிவியின் யுடியூப் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.தனியார் டிவியில் கடந்த ஞாயிறு இரவு ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒருவர் பங்கேற்றார். தி.மு.க எம்.பி., கனிமொழி தயாரித்து கொடுத்த சிகப்பு டி - ஷர்ட்
அரசல்_புரசல்_அரசியல், டிவி, டிவி_நிகழ்ச்சி, மத்தியஅரசு, சோதனை,

சென்னை: தனியார் டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றிற்கு மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, அந்த நிகழ்ச்சி அந்த டிவியின் யுடியூப் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

தனியார் டிவியில் கடந்த ஞாயிறு இரவு ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒருவர் பங்கேற்றார். தி.மு.க எம்.பி., கனிமொழி தயாரித்து கொடுத்த சிகப்பு டி - ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார். "அந்த டி -ஷர்ட்டில் இந்தி தெரியாது போடா" - என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு கனிமொழி தயாரித்து கொடுத்த டிஷர்ட்டை அணிந்துக் கொண்டு கலந்துக் கொண்டது மத்திய அரசு கவனத்திற்கு சென்றது.


latest tamil news




இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவி நிர்வாகத்தை எச்சரித்தனர். இதையடுத்து ஞாயிறு அன்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை யுட்யூபில் இருந்து நீக்கிப்பட்டது. மேலும் இனிமேல் ராதாகிருஷ்ணனை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


கன்னியாகுமரி தொகுதியில் வசந்த் விஜய்க்கு வாய்ப்பு?



காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் காலமானதால், கன்னியாகுமரி தொகுதியில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில், வசந்த குமாரின் மகன் நடிகர் வசந்த் விஜய்யை வேட்பாளராக்கினால், அனுதாப ஓட்டுக்கள் கூடுதலா கிடைக்கும் என, காங்கிரஸ் தரப்புல நினைக்கிறாங்க.
வசந்தகுமார் மகனுக்கு வாய்ப்பு தரலாம்னு, டில்லி மேலிடத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும், வேறு யாருக்கு வாய்ப்பு தரலாம்னு, தமிழக காங்கிரஸ் தலைவரிடம், பட்டியல் கேட்டு இருக்காங்க.
இன்னொரு பக்கம், வசந்தகுமாரிடம், இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மறுபடியும், பா.ஜ., சார்புல போட்டியிட வாய்ப்பு கேட்கப் போறாருன்னு, பா.ஜ., தரப்புல பேச்சு அடிபடுது.


‛பஞ்சாயத்து' செய்து உற்சாகப்படுத்தும் முதல்வர்!



மாவட்டங்களுக்கு ஆய்வுக்குப் போகும் முதல்வர் பழனிச்சாமி, கட்சிக்காரர்களை தனிமையில சந்திச்சுப் பேசி வருகிறார்.
‛சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சியில் பிணக்குகளையெல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு, எல்லாரும் இணைந்து பணியாற்றணும்'னு, சொல்ற முதல்வர், தேர்தல்ல ஜெயிக்க, எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக இருப்பதாக சொல்றாராம்.
செலவு விஷயத்துல தாராளம் காட்டப்படும்னு, முதல்வரே சொல்வதால், கட்சி நிர்வாகிகள் குஷியாகிடுறாங்க.. அதோட, ஒரு சில இடங்கள்ல கோஷ்டிகளா செயல்படும் இரண்டு தரப்பையும் அழைச்சி பேசி, சமாதானமும் செய்து வைக்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
08-செப்-202022:58:41 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் தமிழர்களுக்கே தலைகுனிவு
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-செப்-202022:56:07 IST Report Abuse
Rajagopal அந்த ஆளு நல்லா இந்தி பேசுவான். ஆனா திமுகவுக்கு காவடி எடுப்பான்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
08-செப்-202021:26:30 IST Report Abuse
Baskar ஆரூர் ராங் கருத்தை நான் வரவேற்கிறேன். அவர் ஊடகங்கள் தொலைக்காட்சிகள் அதில் வேலை செய்யும் சில நபர்களின் வேலை செய்யும் பெயர்களை தெரிவித்தேன் ஆனால் நான் எழுதிய கருத்துக்கள் ஆபாசமானவை என்று தினமலர் சொல்கிறது. தவறு செய்தால் கண்டிக்க வேண்டும் அதை விடுத்தது அவர்களை ஊக்குவிக்க கூடாது சில ஆசிரியர்கள் தினமலரில் இது போல் சேது காசு சம்பாதிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. இதை விவாகம் கண்டிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X