பொது செய்தி

இந்தியா

வெறும் நம்பிக்கை போதாது: வெற்றிக்காக பாடுபடுங்கள்

Updated : செப் 08, 2020 | Added : செப் 08, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைவது, அ.தி.மு.க., தலைமையிலா அல்லது பா.ஜ., தலைமையிலா என்ற பேச்சுக்கே இடமில்லை; அது ஒரு பிரச்னையும் இல்லை. வரும் தேர்தலில், பா.ஜ., அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும்; தமிழகத்தில் பா.ஜ., அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும்.'நம்பிக்கை வெற்றி பெறட்டும்; வெறும் நம்பிக்கையோடு நின்று விடாமல், வெற்றிக்காக பாடுபடுங்கள்...' என, அறிவுரை கூறத்
பேச்சு, பேட்டி, அறிக்கை, பேச்சு_பேட்டி_அறிக்கை, ரஜினி, யுவராஜா, ரஜினிகாந்த்,  பாஜ, பா.ஜ., நாராயணன்திருப்பதி, கனிமொழி, உதயநிதி, உதயநிதிஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன்,

தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைவது, அ.தி.மு.க., தலைமையிலா அல்லது பா.ஜ., தலைமையிலா என்ற பேச்சுக்கே இடமில்லை; அது ஒரு பிரச்னையும் இல்லை. வரும் தேர்தலில், பா.ஜ., அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும்; தமிழகத்தில் பா.ஜ., அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும்.


'நம்பிக்கை வெற்றி பெறட்டும்; வெறும் நம்பிக்கையோடு நின்று விடாமல், வெற்றிக்காக பாடுபடுங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.கொரோனா பரிசோதனையில், அமைச்சருக்கு, 'பாசிட்டிவ்' வந்தால், 'நெகட்டிங்' என புளுகுவது; சமானிய மக்களுக்கு 'நெகட்டிவ்' வந்தாலும், 'பாசிட்டிவ்' என சொல்லி, அவர்கள் வீடு முன் தடுப்பு வைப்பது என, 'கமிஷன்' அடிக்கும் செயலில் தமிழக அரசு இறங்கியுள்ளது. கொரோனா பெயரை சொல்லி, இ.பி.எஸ்., அரசு கொள்ளை அடிக்கிறது.


'இப்படி எல்லாம் நடக்கிறதா என, இதை படிக்கும் மக்கள் பதற வேண்டும்; அரசுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்பது தானே, உங்கள் எண்ணம் என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.'ஹிந்தி தெரியாது; போடா' என்ற இளைஞர்களின் சிறிய தீப்பொறி, காட்டுத் தீயாகி, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தலைமுறையிடமும், மொழி உணர்வு சிறப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


latest tamil news

'தெரியாது என்பதை விட, தெரியும் என அறிவிப்பது தானே, இளைஞர்களிடம் இந்த காலகட்டத்தில் இருக்க வேண்டிய அவசியமான அம்சம்; அதை, உங்கள் கட்சி மழுங்க அடிக்கிறதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., அறிக்கை.தமிழகத்தின் ஒட்டுமொத்த அமைப்பே, லஞ்சம் மற்றும் ஊழலில் சிக்கித் திளைக்கிறது என்பதற்கான அடையாளம் தான், விவசாயிகள் கவுரவ நிதியில் நடைபெற்ற முறைகேடு. விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளனர், சில அதிகாரிகள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


'விவசாயிகள் நிதியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள், கவலை அளிக்கின்றன...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.போர் ஆரம்பிக்கும் சூழ்நிலை நிலவினால், கட்சியை துவங்குவேன் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தற்போது, தமிழக அரசு சிறந்த முறையில் செயல்படுவதால், அந்த மாதிரியான நிலை ஏற்படவில்லை. அதனால், ரஜினி கட்சி துவங்குவதற்கான வாய்ப்பு இல்லை.


'ரஜினி எப்பவோ கூறியதை, அவரே மறந்திருப்பார். இப்போதும் அதை நினைவில் வைத்து கேள்வி கேட்ட, சமூக வலைதள ஊடகவியாளர்கள், பரபரப்பை ஏற்படுத்தலாம் என நினைத்திருந்த நிலையில், உங்கள் பதிலால் ஏமாந்து போயிருப்பர்...' என, கூறத் தோன்றும் வகையில், த,மா.கா., மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் மோர்ஸ் தந்தி பயிற்சி பெற்றுவந்த மாணவர்கள் ரயில் பயணத்தின்போது எதிரில் அமர்ந்திருந்த இரு இளம் பெண்களில் யார் அழகுன்னு மோர்ஸ் கருவிகளில் ஒலித்து ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டிருந்தனர் அந்த பெண்களின் அப்பா அவர்களிடமிருந்து மோர்ஸ் கருவி ஒன்றை வாங்கி அதன் மூலமே மிக சரளமாக இருவரையுமே திருமணம் முடித்து தர தயார் உங்களில் யார் தயார் என்று பதிலளித்தார் மாணவர்கள் அசடு வழிந்தார்கள் அப்பன் "மோர்ஸ் மொழி தெரியும் போடா" ன்னுட்டார்
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
08-செப்-202017:42:56 IST Report Abuse
INDIAN Kumar நல்லவர்கள் வேண்டினால் தமிழக நிலைமை மாறும் மாற்றமுடியாது என்று எதுவும் இல்லை. எல்லாமே இறைவன் செயல்/
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
08-செப்-202016:18:10 IST Report Abuse
Baskar தம்பி குச்சிமிட்டாய் கொஞ்சம் அடங்கு இல்லாவிட்டால் மக்கள் தேர்தலில் அடக்கி விடுவார்கள். அப்புறம் சந்தானத்துடன் சேர்ந்து ஆட வேண்டியது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X