கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹர்பஜன் சிங் புகார்: ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 09, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Harbhajan Singh, Madras HC, High Court

சென்னை : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை மோசடி செய்ததாக அளித்த புகாரில், முன்ஜாமின் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை, உத்தண்டியை சேர்ந்த மகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:நானும், பிரபா சேகர் என்பவரும் சேர்ந்து, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம், 4 கோடி ரூபாய் கடன் பெற்றோம். அதற்கு அடமானமாக, தாழம்பூரில் உள்ள சொத்தை அளித்தோம். 2015ம் ஆண்டில், இந்த கடன் பரிவர்த்தனை நடந்தது. தற்போது, 4.05 கோடி ரூபாயை கொடுத்து விட்டேன்.

வட்டி குறித்து பேச்சு நடந்து வருகிறது. எட்டு காசோலைகளை, அவருக்கு கொடுத்திருந்தேன். வைரஸ் பரவலால், பேச்சில் தடங்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நான் கையெழுத்திட்டு கொடுத்திருந்த காசோலையில், 25 லட்சம் ரூபாயை குறிப்பிட்டு, வங்கியில் செலுத்தி உள்ளார். பணம் கொடுக்க வேண்டாம் என, வங்கியிடம் அறிவுறுத்தி இருந்ததால், காசோலை திரும்பியது.


latest tamil news



துன்புறுத்தும் நோக்கில், எனக்கு எதிராக, நீலாங்கரை போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணைக்காக, என்னை அழைத்துள்ளனர். என்னை போலீசார் கைது செய்யலாம். எனவே, முன்ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, மனுவின் விசாரணையை முடித்து வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
09-செப்-202010:20:44 IST Report Abuse
Thalaivar Rasigan 4 கோடி ரூபாய் வட்டி இல்லாமல் உனக்கு கொடுக்க நீ என்ன மாமனா - மச்சானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X