அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,வின் அற்பமான அரசியலை முறியடிப்போம்:' முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை பேட்டி

Updated : செப் 09, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
கோவை : ''தி.மு.க.,வின் அற்பமான மொழி அரசியலை முறியடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்று பா.ஜ.,வில் இணைந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கோவையில் நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:கர்நாடகா காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி சாமானிய மக்களின் பாராட்டைப் பெற்றீர்கள்... தமிழக காவல்துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய
தி.மு.க., அற்பமான அரசியல், முறியடிப்போம், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி, அண்ணாமலை, பா.ஜ., பாஜ

கோவை : ''தி.மு.க.,வின் அற்பமான மொழி அரசியலை முறியடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்று பா.ஜ.,வில் இணைந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையில் நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


கர்நாடகா காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி சாமானிய மக்களின் பாராட்டைப் பெற்றீர்கள்... தமிழக காவல்துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?கட்டமைப்பு வசதிகள்,சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது போன்றவற்றில் தமிழக காவல்துறைக்கு இணையில்லை. ஆனால், கீழ்நிலை காவல் பணியாளர்களுக்கு மிக அதிகமான பணிச்சுமை இருக்கிறது. இதற்கு தீர்வு காண்பது அவசியம். இதைக் கேட்கும் உரிமை காவல்துறையினருக்கு இல்லை. அவர்களுக்காககுரல் கொடுப்பேன்.சாத்தான்குளம் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கும் அடிப்படைக் காரணம், பணிச்சுமைதான். அதற்காக தமிழக காவல்துறையே இப்படிப்பட்டதுதான் என்று எண்ண வேண்டியதில்லை. அங்கே நடந்தது மாபெரும் தவறு. அதற்குக் காரணம் சிஸ்டம். பணி நெருக்கடியின் வெளிப்பாடுதான் அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமாகிறது.


உங்களை கன்னடியர் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொள்கிறீர்கள்... ரஜினியிடம் நெருக்கமாக இருக்கிறீர்கள்...உங்களின் நெருக்கத்துக்கு இதுதான் காரணமா?அடிப்படையில் நான் இந்தியன். பிறப்பால் தமிழன். கர்நாடகாவில் தமிழ் கலாசாரத்தை விதைத்துவிட்டு வந்திருக்கிறேன். அங்குள்ள மக்களும் என்னை வித்தியாசமாகப் பார்த்ததில்லை. ரஜினியையும் மராத்தியர், கன்னடியர் என்று சொல்வதை ஏற்க முடியாது. அவரை வாழவைத்தது தமிழகம். இந்த மண்ணுக்காக அவர் பல விஷயங்களைச் செய்திருக்கிறார். எங்களை இணைப்பது ஆன்மிகம்.நானும் ரஜினியும் அரசியல்பேசியதே இல்லை. எங்களுடைய பேச்சில் முக்கிய இடம் பிடிப்பது, ஆன்மிகம்தான். நான் மோடியின் அபிமானி. அவருடைய செயல்பாடுகள் பெரிதும் பிடிக்கும். நாடு முழுவதும் அரசியல் பணி செய்ய வேண்டுமென்ற ஆசையில்தான் தேசியக்கட்சியான பா.ஜ.,வில் சேர்ந்தேன். ரஜினி கட்சி துவக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.


அ.தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை பா.ஜ., கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அதில் பா.ஜ., பங்கிருப்பதுதான் காரணமென்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே...இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு... அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும் ஆட்சியில் பா.ஜ., பங்கு கேட்கவில்லை. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அளவில் முரண்பாடுகள் உள்ளன. கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.


latest tamil newsபா.ஜ.,வில் மதவாதம், தனி மனித துதி இல்லையா...


ராமர் கோவிலை கட்டி விட்டதால் பா.ஜ.,வை மதவாதக்கட்சி என்று தி.மு.க சொல்கிறது. 1946 லிருந்து வந்த பிரச்னை இப்போது நீதிமன்றத் தீர்ப்பால் சுமுகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அதில், பா.ஜ., தலையீடு எதுவுமேயில்லை. காஷ்மீர் பிரச்னையும் இப்படித்தான், கடந்த ஆண்டில் முடிவடைந்துள்ளது. இதை வைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் தி.மு.க., முடிச்சுப்போடுகிறது. மோடியைப் பாராட்டுவது மக்களின் விருப்பம். தனித்துவம், எளிமை, நேர்மை, அரசியல் அறம் இந்த நான்கு விஷயங்களுக்காகத்தான் மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தான் பிரதமராக இருக்க வேண்டுமென்று மோடி நினைக்கும் வரை அவர்தான் பிரதமராக இருக்கப்போகிறார்.


'இந்தி தெரியாது போடா... டிரெண்டிங்' ஆனதைப் பத்தி என்ன சொல்றீங்க?இதன் பின்னணியில் இருப்பது தி.மு.க.,தான். இந்தியை எதிர்க்கும் தி.மு.க., வாரிசுடன் ஜோடியாக நடித்த எத்தனை நடிகைககளுக்குத் தமிழ் தெரியும்... தமிழ் தெரியாவிட்டால் என்னோடு நடிக்கக்கூடாது என்று அவர் சொல்லியிருக்கிறாரா... தி.மு.க., செய்வது அற்பமான மொழி அரசியல். இப்படித்தான் மிகவும் அவசியமான நீட் தேர்வை எதிர்த்து, தமிழக மாணவர்களின் தன்னம்பிக்கையை தி.மு.க., சீர்குலைத்து வருகிறது.இத்தகைய அரசியலை விட்டுவிட்டு, தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லி 2021 தேர்தலை எதிர்கொள்ளுங்கள். அதை விடுத்து, அப்படித்தான் செய்வோமென்றால், அதையும் எதிர்கொண்டு, தி.மு.க.,வின் அற்பமான அரசியலை முறியடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-செப்-202017:24:54 IST Report Abuse
Malick Raja கள்வர்களுக்குக்கும் இடம் .. காவலர்களுக்கும் இடம் கொடுக்கும் ஒரு கட்சி பிஜேபி .. என்பது உண்மை .. இவர் ஒரு முன்னாள் காவல் அதிகாரி .. கடந்த மாதம் ஒரு பிஜேபி நிர்வாகி திருச்சியில் கஞ்சா கடத்தி பிடிபட்டது .. இதெல்லாம் பார்க்கும்போது நிலைமை கட்சி இருக்குமா என்பதே கேள்வி
Rate this:
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
15-செப்-202008:42:04 IST Report Abuse
Sankar Ramuஅய்யா , அதுதான் பிஜேபி . கெட்டவன் தண்டிக்கப்படுவர். திமுக ல எல்லாம் உத்தமன்னு சொல்லமுடியுமா உன்னால ? ஸ்டாலின் பண்ணாத ஆட்டமா...
Rate this:
Cancel
PKumar - chennai,இந்தியா
13-செப்-202023:34:32 IST Report Abuse
PKumar BJP will give assurance to pupil for one curriculum whether rich or poor. Also uniform fee to be charged for all pupil. It should be nominal and all school names to be changed like TNSTC Will BJP do???
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
10-செப்-202012:34:53 IST Report Abuse
mathimandhiri இதை படிக்காதே அதைப் படிக்காதே என்று சொல்லி அடுத்தவன் பிழைப்பில் மண்ணைப் போட எவனுக்கும் உரிமை இல்லை. நாங்க வேலைக் கும்பிடுவதால் யார் பொழப்பு கெட்டப் போச்சு சொல்ல முடியுமா சம்பத்துனா ?. வேணுமானால் தமிழுக்கும், வேல் போலவே விருப்பப் பட்டஇடத்தில் எல்லாம் ஒரு சிலை செ4ஞ்சு வெச்சு ,வேலைக் கும்பிடுவது போல கும்பிட்டுட்டு போங்க.யார் கேட்கப் போறாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X