பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளிக்காக கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த 'ட்ரோன்'

Updated : செப் 09, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை,: பொது இடங்களில் கிருமிநாசினியை விரைவாக தெளிக்க உதவும், ட்ரோன் மற்றும் சமூக இடைவெளியை கண்காணிக்க உதவும் கையடக்க கருவியை கோவை கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஒரு புறம் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான ஆராய்ச்சிகளும், கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கோவை, அரசூர், கே.பி.ஆர்.,
சமூக இடைவெளி, ட்ரோன், கல்லூரி மாணவர்கள்

கோவை,: பொது இடங்களில் கிருமிநாசினியை விரைவாக தெளிக்க உதவும், ட்ரோன் மற்றும் சமூக இடைவெளியை கண்காணிக்க உதவும் கையடக்க கருவியை கோவை கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த ஒரு புறம் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான ஆராய்ச்சிகளும், கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கோவை, அரசூர், கே.பி.ஆர்., இன்ஜி., கல்லுாரியை சேர்ந்த இயந்திரவியல் துறை மாணவர்கள் பிரவீன்குமார், பத்ரிநாத், மதியரசன், மயில்சாமி ஆகியோர், 'ட்ரோன்' ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதனால், பொது இடங்களில் கிருமி நாசினியை விரைவாக தெளிக்க முடியும். மாணவர்கள் கூறுகையில், 'ட்ரோனில் அலுமினியம் மெட்டீரியல், சானிடைசர் டேங்க், அதில் இருந்து கிருமி நாசினியை தெளிக்க இரண்டு மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிக்னல் டிரான்ஸ்மிட்டர், 'விஷன் லேர்னிங் அல்காரிதம்' உதவியுடன், மொபைல்போன் கேமரா பயன்படுத்தி, சமூக இடைவெளியை கண்காணிக்க செய்கிறது. சமூக இடைவெளி (சோசியல் டிஸ்டன்ஸ்) மற்றும் கிருமி நாசினியை (சானிடைசர்)தெளிக்க பயன்படுவதால் 'சொசைசர் ட்ரோன்' என, பெயரிடப்பட்டுள்ளது' என்றனர்.


latest tamil news




சமூக இடைவெளிக்காக...இதே கல்லுாரி, இயந்திரவியல் துறையை சேர்ந்த நாகசூர்யா, பிரனேஷ், மோகன்தாஸ் இணைந்து 'டிஸ்டெம்பாட்' என்ற வாட்ச் போன்ற கருவியை வடிவமைத்துள்ளனர்.மாணவர்கள் கூறுகையில், 'இக்கருவியை நாம் கையில் அணிந்திருக்கும்போது ஒருவருடன் இரண்டு மீட்டருக்கு குறைவான இடைவெளி ஏற்படும்போது ஒலி எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தும். இக்கருவியை அணிந்து இருப்பவரின் உடல் வெப்பநிலையை தொடர்ச்சியாக கண்காணித்து தெரிவிக்கும். வெப்பநிலை சராசரி அளவை காட்டிலும் அதிகமானால் அதுகுறித்து எச்சரிக்கை செய்யும்' என்றனர்.

உதவிபேராசிரியர்கள் சரவணன், ஜோயல் ஆகியோர் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் இந்த கருவிகளை வடிவமைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
09-செப்-202011:21:54 IST Report Abuse
suresh kumar வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X