திமுக பொது செயலரானார் துரைமுருகன்: துணை பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக பொது செயலரானார் துரைமுருகன்: துணை பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி

Updated : செப் 09, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (60)
Share
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க., பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.திமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் துவங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை அலுவலகத்தில் 70 பேர்
திமுக, dmk, தி.மு.க., திராவிட முன்னேற்ற கழகம், பொது செயலாளர், பொருளாளர், துரைமுருகன், அன்பழகன்,  அ.ராசா, பொன்முடி, ஸ்டாலின், மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க., பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் துவங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை அலுவலகத்தில் 70 பேர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் பொது செயலரின் அதிகாரத்தை மீண்டும் பொது செயலாளரிடமே ஒப்படைக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news



இதன் பின்னர் தி.மு.க.,வின் துணை பொது செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் துணை பொது செயலர்களின் எண்ணிக்கை 3 ல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணை பொது செயலாளர்களாக உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X