பொது செய்தி

இந்தியா

‛ஒய் பிளஸ்' பாதுகாப்புடன் விமான நிலையம் வந்த நடிகை கங்கனா

Updated : செப் 09, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
மும்பை: சிவசேனா உடனான மோதலை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத்திற்கு ‛ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செப்.,9) மும்பை வருவதாக அறிவித்த கங்கனா, பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் வந்தார்.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குப் பிறகு மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணா்வதாக நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், மும்பையை
DeathOfDemocracy, KanganaRanuat, Mumbai, கங்கனா ரனாவத், மும்பை, அலுவலகம், இடிப்பு, மாநகராட்சி

மும்பை: சிவசேனா உடனான மோதலை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத்திற்கு ‛ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செப்.,9) மும்பை வருவதாக அறிவித்த கங்கனா, பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் வந்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குப் பிறகு மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணா்வதாக நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், மும்பையை மினி பாகிஸ்தான் என்றும் கூறியிருந்தார் அவரது கருத்துக்கு ஆளும் சிவசேனா கட்சியின் தலைவா்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கங்கனாவுக்கும், சிவசேனா கட்சியினருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது என்றும் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'ஒய்' பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் 'ஷிப்ட்' அடிப்படையில் 24 மணி நேரமும் கங்கனாவிற்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத் நன்றி கூறியுள்ளார். இந்நிலையில், இன்று மும்பை வருவதாகவும், முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என சிவசேனாவுக்கு சவால் விடுத்த கங்கனாவிற்காக, மும்பை விமான நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


அலுவலகம் இடிப்பு

இந்நிலையில், மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலிஹில்லில் கங்கனா ரணாவத்தின் அலுவலகம் உள்ளது. இங்கு மாநகராட்சியின் ஒப்புதலை பெறாமல், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிப்பறை இருந்த இடத்தில் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. படிக்கட்டு இருந்த இடத்தல் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.


latest tamil news



இவ்வாறு கட்டடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களுக்காக, மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டதா என பதிலளிக்குமாறு, கங்கனா ரணாவத்திற்கு உத்தரவிடப்பட்டது. அலுவலகத்தில் யாரும் இல்லாததால், அங்கு நோட்டீசை ஒட்டி சென்றனர். இதனை எதிர்த்து கங்கனா, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news


இந்நிலையில், அந்த அலுவலக கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள், அனுமதியின்றி கட்டியதாக கூறி இடித்தனர். இதனை டுவிட்டரில் படம்பிடித்து வெளியிட்டுள்ள கங்கனா, மும்பை நகரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுள்ளார்.




தடை

இதனிடையே, கங்கனா ரணாவத் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அலுவலகத்தை இடிக்க தடை விதித்தது. மேலும், மனு குறித்து பதிலளிக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அலுவலகத்தை இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
10-செப்-202023:31:11 IST Report Abuse
Vetri Vel ஒரு நடிகைக்கு இதனை பாதுகாப்பு வேணுமா..? அப்படி என்ன வச்சிருக்கார்..பையில்...
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
10-செப்-202010:32:25 IST Report Abuse
தஞ்சை மன்னர் அக்கா ஏன் புலியாக மாறினார் என்று இப்போதுதான் தெரிகிறது , வீதி மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு இங்கு யாரும் ஏதும் சொல்லவில்லை
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
10-செப்-202009:27:18 IST Report Abuse
venkata achacharri சிவா சேனா செய்தது தவறாக இருக்கலாம் ஆனால் உபி உயில் பாதுகாப்புக்கு கேட்டும் எந்த பாதுகாப்பும் கிடுக்காமல் தன குடும்பத்தியெய் இழந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு என்ன நடவடிக்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X