பா.ஜ.,வுடன் மோதல்: விலகுவாரா சுப்ரமணியன் சுவாமி?

Updated : செப் 09, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வின் ஐ.டி., குழு தலைவர் அமித் மால்வியாவை நாளைக்குள் பதவியில் இருந்து நீக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கருத்து கேட்பேன் என அக்கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்ரமணியன் சுவாமி, தன்னை
Subramanian Swamy, Swamy39, சுப்ரமணியன் சுவாமி, B.J.P, BJP, Bharatiya Janata Party, பா.ஜ

புதுடில்லி: பா.ஜ.,வின் ஐ.டி., குழு தலைவர் அமித் மால்வியாவை நாளைக்குள் பதவியில் இருந்து நீக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கருத்து கேட்பேன் என அக்கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்ரமணியன் சுவாமி, தன்னை கட்சியின் ஐ.டி., விங் தலைவர் தரக்குறைவாக விமர்சிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு மோசமாக நடக்கிறது. அதில் சில உறுப்பினர்கள் போலி ஐடி.,யில் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவிடுகின்றனர். எனது ஆதரவாளர்கள் கோபமடைந்து பதிலடி கொடுத்தால், நான் பொறுப்பேற்க மாட்டேன். ஆனால், கட்சியின் ஐடி பிரிவுக்கு பா.ஜ., தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அமித் மால்வியா எந்த பதிலும் அளிக்கவில்லை.


latest tamil newsஇந்நிலையில், டுவிட்டரில் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பா.ஜ.,வின் ஐ.டி., விங் தலைவர் அமித் மால்வியாவை நாளைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை நீக்காவிட்டால், பா.ஜ., என்னை பாதுகாக்கவில்லை என அர்த்தம். கட்சியில் எனக்கு இடமில்லாததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்பேன். என்னை நானே பாதுகாத்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.இதனால், சுப்ரமணியன் சுவாமிபா.ஜ.,வில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
10-செப்-202017:54:38 IST Report Abuse
Hari இந்த செய்தி உண்ம்மையானதா.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-செப்-202014:55:50 IST Report Abuse
Sridhar இந்த ஆள் அறிவாளி என்பதை மீறி தயிரியசாலி துணிச்சலானவர் என்று கூறலாம். எந்த ஒரு மனிதனும் நூறுசதவிகிதம் சரியாக இருக்கமுடியாது என்ற சொல்வடைக்கு ஏற்ப, இந்த ஆள் ஒரு கட்சியில் இருந்து அதன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் நபர் இல்லை.
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
10-செப்-202012:55:42 IST Report Abuse
Kumar ivar veliyai vanthaal rafel unmai velivarum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X