குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: பாரதிக்கு நினைவு நூற்றாண்டு!

Updated : செப் 12, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (97)
Advertisement
தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன. தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி. ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது. சமூக ஆர்வலர், பத்திரிகையாளர்,

தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன. தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி.latest tamil newsஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது. சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட தமிழர், பாரதி. இந்திய விடுதலைப் போரில் இவரின் தமிழ் பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை 'தேசிய கவி' எனப் போற்றிப் புகழ்ந்தனர்.பிறப்பு


திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882ம் ஆண்டு டிச., 11ம் தேதி பிறந்தார் சுப்ரமணிய பாரதியார். சிறு வயதிலேயே தமிழ் மொழி அறிவும் தமிழ் உறவுகள் மீதான அக்கறையும் இவரிடம் இருந்தது. தமிழ் மொழி மீதான சிந்தனைத் தெளிவும் பற்றும் வெகு விரைவிலேயே இவரை மாபெரும் புலவராக மாற்றியது. தன் 11ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலையும் அறிவையும் பயிற்சியால் வென்றார் பாரதி. 1897ல் பாரதியின் இல்லறத்தில் இனியாளாக பங்குகொண்டார் செல்லம்மா.


latest tamil news

இலக்கியப் பணி


தமிழ் மொழி மீதும், இலக்கியப் பணி மீதும் தணியாத ஆர்வம்கொண்டவர் பாரதி. தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், இந்தி என, பலவேறு மொழிகளைப் பயின்றார். 'சுதேசமித்திரன்' என்ற தமிழ் பத்திரிகையில், 1904ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.


பகவத் கீதையும்... பாஞ்சாலி சபதமும்!


இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912ல் தமிழில் மொழிபெயர்த்தார். பரத கண்டத்தின் மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை 'பாஞ்சாலி சபதம்' என்ற பெயரில் படைத்தார். கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகளும் எழுதினார்.


சுதந்திரப் போராட்டத்தில் பாரதி


சுதந்திரப் போராட்டத்தின்போது இவரின் கருத்துகளும் கட்டுரைகளும் கவிதைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை அனைவரது உள்ளத்திலும் விதைத்தன. மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, பார் போற்றும் கவிஞரானார். இவரின் எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.


latest tamil newsதமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, உலக இலக்கிய ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்ட பாரதி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து, 1921ம் ஆண்டு செப்., 11ம் தேதி உலகைவிட்டு பிரிந்தார்.
தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்த பாரதி நினைவு நூற்றாண்டை கடைபிடிக்க இருக்கிறோம். இதில், பாரதியார் குறித்த தங்களது கருத்துக்களை 'தினமலர்' இணையதளத்தில் நமது வாசகர்கள் எழுதலாம்!

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202014:44:40 IST Report Abuse
Ram 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳பிச்சை எடுத்து சாப்பிட்ட சுதந்திர போராட்ட வீரர்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெர்மனில் இருந்து செண்பகராமனால் இந்தியாவிற்கு எம்டன் கப்பலில் அனுப்பபட்ட ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் சென்னையில் பெற்று ஆங்கிலேயன் மீது தாக்குதல் நடத்த வேண்டிய பொறுப்பு நீலகண்ட பிரமச்சாரியிடம் கொடுக்கபட்டதுஇதற்காக தலைமறைவு வாழ்க்கை வாழந்த அவர் ஆஷ் துரையை வாஞ்சி சுட்டுக் கொன்றதால் அந்த வழக்கில் பிரமச்சாரி குற்றவாளியாக ஆக்கபட்டார் இவரை தேடப்படும் குற்றவாளி தீவிரவாதி என அறிவித்து தேடியது ஆங்கிலேய அரசுஇந்த வேளையில் எம்டன் கப்பலை எதிர்பார்த்து காசியில் இருந்து சென்னை நோக்கி ரயிலில் வரும் போது ஒருவன் காட்டிக் கொடுக்க கைது செய்து சிறையில் அடைக்கபட்டார் நீலகண்டன் கொடூர சிறை தண்டனைக்கு பின்பு விடுதலையான அவருக்கு வேலை கொடுக்கவோ உதவி செய்யவோ ஒருவரும் இல்லை தீவிரவாதி என ஆங்கிலேயன் அறிவித்ததால்அப்படியும் சுதந்திர போராட்டத்தை விடவில்லை அவர் பகலிலே சுதந்திர பிரச்சாரம் வயிற்று பசிக்கு இரவிலே ராப் பிச்சை எடுத்து சாப்பிட்டார் சில நாட்களில் இப்படியும் பிச்சை எடுத்து சாப்பிட்டு உயிர் வாழ வேண்டுமா என்று பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டார்பசியின் கோரபிடியில் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியவருக்கு நினைவில் வந்த ஒரே பெயர் #பாரதி இங்கே தானே பாரதி உள்ளான் என பாரதியின் வீடு நோக்கி ஓடுகிறார் பாரதியின் வீட்டு வாசலில் நின்று பாரதி என கத்துகிறார் வெளியே வந்த பாரதி சிறிது நேர திகைப்பிற்க்கு பின் நீலகண்டா எப்படியடா இருக்கிறாய் அடையாளம் தெரியாமல் மெலிந்து விட்டாயே என்கிறார் சாப்பிட்டாயா என்கிறார் பசிக்கிறது பாரதி என்று கதறுகிறார் வீட்டிற்குள் ஓடி தேடுகிறார் அங்கேயும் உணவில்லை கால் அணாவை எடுத்து வந்து முதலில் சாப்பிட்டு விட்டு வா பிறகு பேசுவோம் என்கிறார் பாரதி அப்பொழுது பாடியபாடல் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் இந்த நீலகண்டன் தான் பாரதியை சுமந்து சென்ற நால்வரில் ஒருவர் எம் தேசமே எங்கே இந்த வரலாறு தமிழனை அழித்த திராவிடம்
Rate this:
Cancel
Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
12-செப்-202013:49:28 IST Report Abuse
Sridharan Venkatraman ஹிந்தி தெரியாது போடா நாட்டில் பாரதிக்கு ஏது இடம்? வெட்கம் இல்லா ஊடகங்கள்...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-செப்-202013:30:06 IST Report Abuse
S.Baliah Seer உரலுக்கு ஒருபுறம் இடி. மத்தளத்துக்கு இருபுறமும் இடி.இந்த மகா கவிஞனின் வாழ்க்கையின் கடைசிகாலம் மத்தளமாக இருந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X