பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்காக ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

Updated : செப் 09, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
karnataka, air-ambulance, launched, bs yediyurappa, corona, patients, save, life,கர்நாடகா, ஏர்-ஆம்புலன்ஸ், சேவை, துவக்கம், பி.எஸ்.எடியூரப்பா, கொரோனா நோயாளிகள்

பெங்களூரு: கர்நாடாகாவில் கிராமப்புறங்களில் உள்ள கொரோனா நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக நாட்டிலேயே முதலாவதாக ஏர் ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா துவங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமங்களில் ஆம்புலன்ஸ் வசதி உடனடியாக கிடைக்காமால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக கூறப்பட்ட நிலையில் அதனை தடுக்கும் விதமாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


latest tamil news


பெங்களூரில் உள்ள ஜக்கூர் பயிற்சி விமான நிலையத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். இச்சேவையை ICATT எனப்படும் ‛International Critical Air Transfer Team' மற்றும் ‛Kyathi' நிறுவனம் இரண்டும் இணைந்து துவங்கி உள்ளன.

இச்சேவை குறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‛ ஏர் ஆம்புலனஸ் சேவை மூலம் நோயாளிகளுக்கு மருத்துவர்களின் சிகிச்சை உடனடியாக விமானத்திலேயே வழங்கப்படும். பெங்களூரு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் இச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது' இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
09-செப்-202019:59:29 IST Report Abuse
Ramesh Sargam ஆம்புலன்ஸ் வசதி உடனடியாக மாநிலத்தின் தலைநகரம் ஆன பெங்களூருவிலும் சில சமயங்களில் கிடைப்பதில்லை. இது முதல்வருக்கு தெரியாதா???
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் இந்த திட்டத்தை நான் எதிர்க்கிறேன். கொரோனா நோயாளி ஹெலிகாப்டரில் செல்லும் போது தும்மல் போட்டால் அது சூரிய மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பிறகு என் கட்சி சின்னத்துக்கு பிரச்சினை ஏற்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X