நடைபாதை வியாபாரிகளுக்கும் 'ஆன்லைன்' விற்பனை வசதி

Updated : செப் 11, 2020 | Added : செப் 09, 2020 | கருத்துகள் (2+ 9)
Share
Advertisement
நடைபாதை வியாபாரிகளுக்கும் 'ஆன்லைன்' விற்பனை வசதி: மோடி

போபால் : ''பெரிய ஓட்டல்களில், 'ஆன்லைன்' விற்பனை, வினியோக வசதி உள்ளதுபோல், நடைப்பாதை வியாபாரிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள், தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் துவக்குவதற்காக, கடந்த ஜூன், 1-ம் தேதி, 'பிரதமமந்திரி சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி' என்ற பெயரில் புதிய திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.


4.5 லட்சம்



இந்த திட்டத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில், 4.5 லட்சம் சாலையோர வியாபாரிகள் இணைந்துள்ளனர்.
இதில், தகுதியுடைய, 2.45 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள், இணையதளம் வழியாக வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, 140 கோடி ரூபாய் நிதியுதவியை, 1 லட்சத்து, 40 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வியாபாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:இந்த திட்டம் துவங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள், 4.5 லட்சம் சாலையோர வியாபாரிகளை இணைந்துள்ள, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு பாராட்டுகள்.மத்திய பிரதேச மாநிலத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் மூலம், நடைபாதை வியாபாரிகளின் வாழ்வில் புதிய துவக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், நவீன தொழில்நுட்ப வசதியையும், நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.



பெரிய ஓட்டல்களில், ஆன்லைன் வழியாக பொருட்களை விற்கவும், வினியோகவும் செய்யவும் வசதிகள் உள்ளன. அதே வசதி, நடைபாதை வியாபாரிகளுக்கும் ஏற்படுத்தி தரப்படும். வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்தால், இந்த வசதி விரைவில் கிடைக்கும்.கொரோனா பரவலிலும், பெரிதும் பாதிக்கப்பட்டது ஏழைகள் தான். அவர்கள் வேலையிழந்து, தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.இதை உணர்ந்த அரசு, அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பல வகையில் உதவிகள் செய்தது.


விடுதலை



இந்த நிதி திட்டத்தில் உள்ள விதிகள், மிக எளிமையானது. தனியாரிடம் கடன் வாங்கி, கடும் வட்டி செலுத்தி வந்த வியாபாரிகளுக்கு, அதிலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தில், வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான வட்டி, மிக, மிக குறைவு, கடனை முறையாக செலுத்தினால், மேலும் பல வசதிகளை பெற முடியும்.


வறுமை ஒழிப்பு



சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, நாட்டில் வறுமையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த, ஆறு ஆண்டுகளில், வறுமையை ஒழிக்க திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போல், முன்பு எடுக்கப்படவில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.முன்னதாக, இந்த திட்டத்தின் பயனாளிகள் சிலருடன், பிரதமர் மோடி கலந்துரையாடினார். மத்திய பிரதேசத்தில், 378 உள்ளாட்சிஅமைப்புகளில் உள்ள பொது இடங்களில், எல்,இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சியை பயனாளிகள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பிரதமர் மீன் வளர்ப்பு மேம்பாட்டு திட்டம்



நாட்டில், மீன் உற்பத்தியை, 2024 - -25ம் ஆண்டுக்குள், 220 லட்சம் டன்னாக அதிகரிக்க, மத்திய அரசு, 'பிரதமர் மீன் வளர்ப்பு மேம்பாடு' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 20 ஆயிரத்து, 50 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட உள்ள இந்த திட்டத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், மீன்வளத் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 55 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டில்லியில் பிரதமர்அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி, 'பிரதமர்மீன் வளர்ப்பு மேம்பாடு' என்ற திட்டத்தை, பீஹாரில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, இன்று துவக்கி வைக்கிறார். அத்துடன், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறைகளில், பல்வேறு நலத் திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.

பீஹாரில் சீதாமர்ஹி மாவட்டத்தில், மீன் குஞ்சுகள் வங்கியையும், கிஷன் கஞ்சில், நீரில் வாழும் உயிரினங்களின் நோயை கண்டறிவதற்கான ஆய்வகத்தையும் துவக்கி வைக்கிறார். விவசாயிகளின் நேரடி பயன்பாட்டிற்காக, 'இ-கோபாலா' என்ற செயலியையும் பிரதமர் துவக்கிவைக்கிறார்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
10-செப்-202021:36:24 IST Report Abuse
கொக்கி குமாரு இந்த பதிவில் சிங்கப்பூர் மணி அவர்களும், குஞ்சுமணி அவர்களும், பிஜு அவர்களும் கேள்வி கேட்டிருந்தார்கள். பதில் சொல்லியிருந்தேன். அவர்களின் பதிவுகளை காணவில்லை. எங்கு முறையிடுவது?
Rate this:
Cancel
10-செப்-202010:45:18 IST Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) நடைபாதை வியாபாரிகளுக்கும் அதிகமான consumer base வெகுவாக சந்தர்ப்பத்தை கொடுக்கும் / எஸ்டாபிளிஷ்மென்ட் cost இல்லாததால் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உண்டாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X