சென்னை:''தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என, அக்கட்சி, 'பில்டப்' கொடுத்துள்ளது,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை, கொத்தவால் சாவடியில் நடந்த, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:ஒவ்வொரு கட்சியும் தீர்மானம் போடும் போது, 'பில்டப்' கொடுப்பது வழக்கம். அதுபோலவே, தி.மு.க.,வும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக தீர்மானம் போட்டு, 'பில்டப்' செய்துள்ளது.இதில், அவர்களின் தீர்மானம் முக்கியமல்ல; மக்களின் தீர்மானம் தான் முக்கியம்.
தன் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை, அனைத்து கட்சிகளுக்கும் உண்டு. அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் தீர்மானமாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சி என்றால், நாங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்; செய்யும் எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது. அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சட்டப்படி முடிவெடுக்கப்பட்டு விரைவில் நடக்கும்.
வாங்கும் கடனை, வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் மாநிலம் தமிழகம். ரிசர்வ் வங்கி, வளர்ந்த மாவட்டங்களுக்கு, எப்போதும் போல நிதி வழங்க வேண்டும் என, நம் முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE