பொது செய்தி

இந்தியா

சீனப்படைகள் குவிப்பால் எல்லையில் தொடரும் பதற்றம்

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: சீனா கூடுதல் படைகளை குவித்துள்ளது மற்றும் நம் விமானப்படை கூடுதல் விமானங்களை அனுப்பியுள்ளதால், இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் தொடருகிறது.இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.மூன்று மாதங்களுக்கு மேலாக, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சு நடத்தியும், படைகள் திரும்பப் பெறப்படவில்லை.எல்லையில்

புதுடில்லி: சீனா கூடுதல் படைகளை குவித்துள்ளது மற்றும் நம் விமானப்படை கூடுதல் விமானங்களை அனுப்பியுள்ளதால், இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் தொடருகிறது.இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.



latest tamil news



மூன்று மாதங்களுக்கு மேலாக, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சு நடத்தியும், படைகள் திரும்பப் பெறப்படவில்லை.எல்லையில் இருக்கும்போது, ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செப்., 7ம் தேதி இந்தியப் படைகள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதாக, சீன ராணுவம் குற்றஞ்சாட்டியது.ஆனால், சீன படைகள்தான் ஆயுதங்களுடன் எல்லையில் அத்துமீற முயன்றதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும், நம் ராணுவம் கூறியுள்ளது.'பிரச்னைக்கு தீர்வு காண பேச்சு ஒன்றே தீர்வு' என, இரு தரப்பும் கூறி வருகின்றன.

ஆனால், அதை மீறி, எல்லையில் சீன ராணுவம் கூடுதல் படைகளை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை சமாளிக்கும் வகையில், நம் விமானப் படையும், சுகோய் - 30, மிக் ரக விமானங்களை அனுப்பியுள்ளது. இவற்றின் மூலம், கூடுதல் வீரர்களும், ஆயுதங்களும் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனால், எல்லையில் பதற்றம் தொடர்கிறது.அமைச்சர்கள் சந்திப்புரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது.


latest tamil news



இதன் ஒரு பகுதியாக, இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடும் நடந்து வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் சென்றுள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அளிக்கும் விருந்தில், உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதைத் தவிர, ரஷ்யா, சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க உள்ளதாக, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maharajan - Bangalore,இந்தியா
10-செப்-202016:06:10 IST Report Abuse
Maharajan ஒரு நாள் சீனா படை குவிப்பு, அத்துமீறல்ன்னு செய்தி போடணும்...மறுநாள் காலையில கோழி கூவுறதுக்கு முன்னாடியே இந்தியா சீனாவுக்கு எச்சரிக்கைன்னு செய்தி போடணும். அப்பதான் மக்களும் மோடி நல்லவருங்கோ, வல்லவருங்கோன்னு நம்புவாங்க... இந்த பொருளாதாரம், ஆதாரம், தாரம் இப்படி எந்த பேச்சும் இருக்கக்கூடாது
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
10-செப்-202014:46:23 IST Report Abuse
Balasubramanian Ramanathan கள உண்மை நிலையை மக்களுக்கு விளக்குங்கள். நீங்கள் பாதுகாப்பு துறை ஆளு. உங்களுக்கு எதுக்கு போருளாதாரமெல்லாம். அதை பொருளாதார மேதைகள் பப்பு, சுடலை, அண்ணன் அழகிரி அவிங்க பாத்துப் பாங்க.
Rate this:
Cancel
10-செப்-202013:06:39 IST Report Abuse
ஆப்பு ரெண்டு நாட்டுக்கும் எக்கானமி ப்ராப்ளம். இது மாதிரி பேச்சு வார்த்தைன்னு சொல்லிட்டு, படைகளையும் குவிச்சு பதட்டம்னு சொன்னா மக்கள் அசல் ப்ர்ச்சனையை மறந்துருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X