சிறை விதிகளின்படி சலுகை; சசிகலா விரைவில் 'ரிலீஸ்!'

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (63) | |
Advertisement
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அடிப்படையில், அவர் விரைவில் விடுதலையாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.அவருக்கு நீதிமன்றம் விதித்த, அபராதத் தொகை, 10 கோடி ரூபாயை செலுத்தி, அவரை விரைவாக சிறையில் இருந்து வெளியில் அழைத்து வர, அவரது
Sasikala, jail rules, release, சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் அடிப்படையில், அவர் விரைவில் விடுதலையாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.அவருக்கு நீதிமன்றம் விதித்த, அபராதத் தொகை, 10 கோடி ரூபாயை செலுத்தி, அவரை விரைவாக சிறையில் இருந்து வெளியில் அழைத்து வர, அவரது வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து, சசிகலா வழக்கறிஞர் ராஜாசெந்துார் பாண்டியன் கூறியதாவது: கடைசியாக, மார்ச் 7ல் சசிகலாவை பார்த்தேன். அதன்பின், கொரோனா காரணமாக சிறைவாசிகளை, வழக்கறிஞர்களோ, அவர்கள் குடும்பத்தினரோ சந்திக்க, சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மீண்டும் அனுமதி கிடைத்ததும், சிறைக்கு சென்று, அவரை சந்திப்பேன்.கடந்த ஆண்டு அக்டோபரிலேயே சசிகலா, மூன்றில் இரண்டு பங்கு சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். எனவே, சிறை தண்டனை குறைப்பு சலுகை பெற தகுதி பெறுகிறார். அதன் அடிப்படையில், அவரை வெளியில் அழைத்து வருவதற்கான, சட்டப் பணிகளை செய்து வந்தேன்.


latest tamil newsமார்ச் இறுதியில், முடிவு தெரியும் சூழல் இருந்தது. மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்து, அனுமதி வழங்கப்படாததால், சிறை நிர்வாகம் என்ன முடிவெடுத்தது என்பது தெரியவில்லை. முடிவு எடுக்கப்பட்டிருந்தால், தகவல் வந்திருக்கும்; நேரில் செல்லும்போது தகவல் தெரியும்.சசிகலாவிற்கு சாதாரண சலுகைகள் வழங்கினாலே, அவர் வெளியில் வர முடியும். கர்நாடக சிறைத் துறை, ஒரு மாதத்திற்கு மூன்று நாட்கள் வீதம், தண்டனை குறைப்பு சலுகை வழங்குகிறது. இது, அனைத்து சிறைவாசிகளுக்கும் பொருந்தும்.

ஊழல் தடுப்பு பிரிவு குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு, எவ்வித சலுகையும் கிடையாது என, விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இம்மாதம் வரை, 43 மாதங்கள் சிறை வாசத்தை முடிக்கிறார்.அதன் அடிப்படையில், 129 நாட்கள் தண்டனை குறைப்பு வரும். பரோலில் வந்த, 17 நாட்கள் கழித்து, சிறை விதிகளின் அடிப்படையில், இம்மாதம் இறுதியில், அவர் வெளியே வருவதற்கு, அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

சிறையிலிருந்து இம்மாத இறுதியில் சசிகலா வெளியே வந்த பிறகு, அ.தி.மு.க.,வில் மாற்றம் இருக்குமா, அதற்கு முதல்வர் இ.பி.எஸ்., ஒப்புக் கொள்வாரா என்பது, விரைவில் தெரிய வரும்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
11-செப்-202017:33:07 IST Report Abuse
S.P. Barucha சசிகலா கூவத்தூர் பங்களாவில் தானே ஆட்சியை ஒப்படைத்தார். தேர்தலுக்கு முன் ஆட்சி செய்பவர்களின் வருமானத்திற்கதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்த பின்னே தேர்தல் நடத்தவேண்டும்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
10-செப்-202018:40:50 IST Report Abuse
Loganathaiyyan இப்போது குரு ராகு கேது சனி தான் இருக்கும் இடத்திலிருந்து இந்த வருட கடைசிக்குள் ஒவ்வொன்றும் வேறு வீட்டுக்கு செல்வதால் டாஸ்மாக் நாட்டை -டை தொற்றும் என்று போடவேண்டும் இந்த சதிகாரி தான் இருந்த வேறு மாநிலத்திலிருந்து இந்த மாநிலத்திற்கு மாறுவது அப்படியே சனியின் தொற்று மிக தீவிரம் என்று கருத்து கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-செப்-202018:26:30 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்றுஒழியுமோ இந்தகேவலமெல்லாம் தமிழ்த்தாய் உன் தலைவிதியைபாரும்மா இவனெல்லாம் கொடிகளிலே லக்ஷமலே பணம்குவிச்சுருக்கானோ நிலம் தங்கமென்றுகுவிச்சுட்டு அப்பாவியாட்டம் வளையவரானோ எல்லோரும் பெண்ணிலேஸ் ஆகா வரும்காலம்வரவேண்டும் மக்களே அறிவு இருந்தால் தப்பிக்கவும் இந்த ரெண்டு ஊழல்பேறுக்கங்களிடமிருந்து இப்போது நன்னப்படிச்சவா நெரையறுக்காலே நன்னா தீர்க்கமான யோசனையுடன் குடியை ஒலிக்கும் நல்லவனுக்கே ஓட்டுப்போட்டு தமிழ்நாடடைகாக்கவும் நோ திமுக நானோ அதிமுக வேண்டவே வேண்டாம் சசிகலா அண்ட் அவ உறவுகளே என்று தீர்க்கமான நல்லாட்ச்சிவரை உதவுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X