பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே ரேஷன் திட்டம்: அடுத்த மாதம் அமல்

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
one country one ration card, one ration, Tamilnadu

சென்னை : தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமலாகிறது. இதற்காக ரேஷன் கடைகளில் 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகை கருவிகள் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாடு முழுதும் இடம்பெயரும் தொழிலாளர்கள் வசதிக்காக மத்திய அரசு 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பிற மாநிலங்களின் கார்டுதாரர்கள் தமிழகத்திலும்; தமிழக கார்டுதாரர்கள் மற்ற மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்.

இத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகளுக்கு மாற்றாக கைரேகையை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய நவீன கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news


ஜூலை இறுதியில் இந்த பணி துவங்கிய நிலையில் இதுவரை திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கரூர், நாகை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன.மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகளில் அந்த கருவிகள் வைக்கும் பணியை இந்த மாதத்திற்குள் முடிக்க உணவு துறை திட்டமிட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-செப்-202000:06:11 IST Report Abuse
தமிழ்வேல் ஐயோ, எங்க தோப்புல குடிசைபோட்டிருக்கும் 90 வயசு பாட்டி விரலை கொண்டுபோகணுமா...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-செப்-202018:31:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni ரேஷன் என்பது முக்கியமா ஏழைகளுக்கு தான் கிடைக்கவேண்டும் ஆனால் அவாளுக்கு போக்கவேண்டியதை எல்லாம் கூட்டாக சாதி செய்து கள்ளமா அண்டைமாநிலம்களுக்கே விர்ருக்காசு சேர்க்கும் சம்பளமே வாங்காத எல்லா எம் எல் ஏ எம்பி போன்றபரம ஏழைகளே தான் சாதிக்காரா. இதுலே திமுக அண்ட் அதிமுக ரொம்பவே ஒத்துமை
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
10-செப்-202017:58:02 IST Report Abuse
vnatarajan கைரேகை பதிவு செய்த கார்டுதாரர் மட்டும் தான் கடைக்கு போய் ரேஷன் வாங்கமுடியுமா. அல்லது அவரது குடும்பத்தில் உள்ள வேறு யாராவது போய் வாங்கலாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X