குடியரசு கட்சி வெளியிட்ட 'வீடியோ': இந்திய வம்சாவளியினரை கவர வியூகம்

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளின் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்ட, 'வீடியோ'வை, குடியரசு கட்சி வெளியிட்டது. இதன்மூலம், இந்திய வம்சாவளியினரின் ஆதரவு கிடைக்கும் என அக்கட்சி நம்புகிறது.அமெரிக்காவில், நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளின் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்ட, 'வீடியோ'வை, குடியரசு கட்சி வெளியிட்டது. இதன்மூலம், இந்திய வம்சாவளியினரின் ஆதரவு கிடைக்கும் என அக்கட்சி நம்புகிறது.



latest tamil news



அமெரிக்காவில், நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இங்குள்ள முக்கிய மாகாணங்களில், வெற்றியை தீர்மானிக்கும் மக்களாக, இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர். இவர்களை தங்கள் பக்கம் இழுக்க, ஜனநாயக கட்சி, துணை அதிபர் வேட்பாளராக, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசை களமிறக்கியது. இது, ஜனநாயக கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவரும் முயற்சியாக, இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவை பிரதிபலிக்கும் வீடியோவை குடியரசு கட்சி, கடந்த மாதம் வெளியிட்டது.'மேலும் நான்கு ஆண்டுகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவின் துவக்கத்தில், கடந்த ஆண்டு, ஹூஸ்டனில், அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்ற, 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியின் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


latest tamil news



இதேபோல், இந்த ஆண்டு துவக்கத்தில், குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியின் சில காட்சிகளும், இதில் இணைக்கப்பட்டுள்ளன. வீடியோவின் இறுதியில், இந்தியா மீது, அமெரிக்கா வைத்துள்ள விசுவாசத்தை, அதிபர் டிரம்ப் வெளிபடுத்துவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது, அமெரிக்காவிற்கு மரியாதை உள்ளதாகவும், இந்திய மக்களின் நம்பிக்கையான மற்றும் விசுவாசமான நண்பராக, அமெரிக்கா விளங்கும் என்றும், டிரம்ப் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவுக்கு, இந்திய வம்சாவளியினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் தேர்தலில் இதனால் பலன் கிடைக்கும் என, குடியரசு கட்சியினர் நம்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
11-செப்-202004:05:38 IST Report Abuse
Sai GLOBAL PRACHARAK கடைசி நேரத்தில் நாலு மீட்டிங் னு போயிட்டு வரலாமே
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
10-செப்-202018:05:27 IST Report Abuse
vnatarajan இதில் என்ன மோசடி இருக்கு இதெல்லாம் தேர்தல் ஸ்ட்ராட்டஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X