சீனா, இந்தியாவுக்கு பிடன் ஆதரவு: டிரம்ப் கடும் தாக்கு

Updated : செப் 10, 2020 | Added : செப் 10, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: 'ஜனநாயகக் கட்சியின் சுற்றுச்சூழல் கொள்கையானது உலகை மாசுபடுத்திவரும் சீனா ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக உள்ளது' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக தாக்கி பேசினார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவ. 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை
Trump, Biden, ClimatePlan, FreePass, China, Russia, India, பிடன், டிரம்ப், இந்தியா, சீனா, ரஷ்யா

வாஷிங்டன்: 'ஜனநாயகக் கட்சியின் சுற்றுச்சூழல் கொள்கையானது உலகை மாசுபடுத்திவரும் சீனா ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக உள்ளது' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக தாக்கி பேசினார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவ. 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். புளோரிடாவில் நடந்த பிரசார கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை டிரம்ப் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் காற்று மாசுபடுத்துவதை தடுப்பதில் சிறந்த நாடாக உள்ளோம். உலகிலேயே மிகவும் சுத்தமான நீர் மற்றும் காற்றை அமெரிக்கா அனுபவித்து வருகிறது.


latest tamil news


அமெரிக்காவின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த சுற்றுச்சூழல் கொள்கையை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதனால்தான் 2017ல் பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து அதில் இருந்து வெளியேறினோம். சீனா இந்தியா ரஷ்யா போன்ற நாடுகள் உலகை மாசுபடுத்துகின்றன. அவர்கள் தங்களுடைய நாட்டை சுத்தப்படுத்த மாட்டார்களாம். ஆனால் அவர்களுக்காக நாம் நம்முடைய நாட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமாம்.

மேலும் அவர்களுக்கு நாம் நிதி உதவியும் அளிக்க வேண்டும். அதனால்தான் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினோம். ஆனால் ஜோ பிடனின் சுற்றுச்சூழல் கொள்கையானது நம் நாட்டை பாதுகாப்பதற்கானது அல்ல; நம்முடைய மத்திய வர்க்க மக்களுக்கு தண்டனை கொடுப்பதாகும். அதே நேரத்தில் சீனா, ரஷ்யா, இந்தியாவுக்காக நம் நாட்டை திறந்து விட்டுவிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
10-செப்-202011:02:34 IST Report Abuse
Nallavan Nallavan எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்களுக்கு டிரம்ப் சொன்ன குற்றச்சாட்டின் நியாயமும், அதில் இருக்கும் தீவிரமும் புரியும் மற்றவர்களை பொறுத்தவரை இது வெறும் அரசியல் ஆவேசக் கூச்சல்
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
10-செப்-202016:00:29 IST Report Abuse
Naresh Giridharஎன்ன நியாயம் என்று கொஞ்சம் புரிய வையுங்களேன் ....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
10-செப்-202010:27:45 IST Report Abuse
Anand இந்தாளு செம் சைடு கோல் போட்டுக்கொண்டிருக்கிறான், அதுவும் இந்த நேரத்தில்?
Rate this:
Cancel
10-செப்-202010:24:17 IST Report Abuse
ஆரூர் ரங் ஓசோன் படலத்தில் ஓட்டை விழ அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் நீண்ட கால நுகர்வுக் கலாச்சாரமே காரணம். இப்போது இதனை பிரச்னையாக எழுப்புவது அப்பாவி வளரும் நாடுகளை வறுமையிலேயே உழலவைத்து அடிமைகளாக சுரண்டவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X